ஒரு சில தளங்கள் நல்ல ஹிட்ஸ் பெற்று இருந்தாலும் அது பிளாக்ஸ்பாட் தளமாக இருந்தால் நிராகரித்து விடுகிறது (என் பிளாக்கையும் சேர்த்து). இவைகள் அனைத்தும் ஆங்கிலத்தை தவிர்த்து உள்ளூர் மொழிகளில் எழுதும் பதிவர்களுக்கு மட்டுமே பொருந்தும். (தங்களுடையது ஆங்கில தளமாக இருந்தால் போதும் உடனே கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விளம்பரங்களை வழங்குவார்கள். அது பிரபலமாகாமல் இருந்தாலும் சரி.)

இந்த காலமும் வரும்.
![]()
ஒருவேளை உங்களுடைய தளத்தில் இதற்கு முன்னர் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் வந்து இருக்கும் தற்போது விளம்பரகள் தெரியாமல் இருக்கும் அந்த சமயங்களில் நம்முடைய தளம் கூகுள் அட்சென்சில் தடைசெய்ய பட்டுள்ளதா என்று பரிசோதித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதற்கு முதலில் இந்த லிங்கில் Ban Checker செல்லவும்
- இதில் உங்கள் தளத்தின் URL கொடுத்து அருகில் உள்ள Check it என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய தளம் Google adsense தடை செய்து உள்ளதா இல்லையா என கண்டறியலாம்.
- இந்த தளத்தில் கூகுள் தேடியந்திரம் நம் பிளாக்கை தடை செய்துள்ளதா என்ற வசதியும் உள்ளது ஆனால் அது சரியாக வேலை செய்ய வில்லை. அனைத்து தளங்களையும் தடை செய்துள்ளது என்ற செய்தியே வருகிறது. ஆகையால் அதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம்.
- ஒருவேளை இதில் தடை செய்யப்பட்டுள்ளது என்று வந்தால் நீங்கள் கோரிக்கை இனி அனுப்பாமல் விட்டு விடலாம்.
டுடே லொள்ளு

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments