- இது போல் தடை செய்து விட்டால் அவரால் நம்மை தொடர்பு கொள்ளவே முடியாது.
- நாம் பகிரும் எந்த செய்தியும் அவருக்கு அப்டேட் ஆகாது.
- அவரின் பகிர்தலும் நமக்கு வராது.
- முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- அங்கு கணக்கு(Settings) பகுதியில் உள்ள ரகசியகாப்பு அமைப்புகள்(Privacy Settings) என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உள்ள தடை செய்ய பட்டுள்ளவர்கள் என்பதில் உள்ள Edit your Lists என்பதை க்ளிக் செய்யவும்.
- இப்பொழுது உங்களுக்கு இன்னொரு விண்டோ வரும். அதில் பெயர், மின்னஞ்சல் என்ற இரு கட்டங்கள் இருக்கும் அதில் நீங்கள் தடை செய்ய விரும்போவோரின் பெயரை கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் அந்த பெயரில் உள்ள வர்களின் பட்டியலை உங்களுக்கு காட்டும்.
- இதில் உங்களுக்கு வேண்டாதவரை தேர்வு செய்து அதற்கு நேராக உள்ள Block என்பதை க்ளிக் செய்தால் அவர் தடை செய்யபட்டியலில் வந்து விடுவார்.
- அல்லது மின்னஞ்சலோ கொடுத்து Block this User என்ற பட்டனை அழுத்தினால் போதும் அவர்கள் நேரடியாக தடை செய்யப்பட்டு விடுவார்கள்.
- இனி உங்களின் எந்த விவரங்களையும் அவரால் பார்க்க முடியாது.
- ஒருவேளை பிறகு நீங்கள் அவரை இந்த பட்டியலில் இருந்து நீக்க விரும்பினால் அவரின் பெயருக்கு நேராக உள்ள Unblock லிங்கை அழுத்தினால் அவர் இந்த பட்டியலில் இருந்து நீக்க படுவார்.
டுடே லொள்ளு
எவ்வளவோ வேலைகளுக்கிடையில் வந்து இருப்பீர்கள் ஆதலால் உங்களுக்கு ஞாபக படுத்துவது எனது கடைமையாகும். இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனைடைவார்கள். |
Comments