இணையத்தில் படத்தை க்ளிக் செய்யாமலே பெரியதாக பார்க்க- குரோம் நீட்சி

நாம் இணையத்தில் போட்டோக்களை காணும் போதும் மிகவும் சிறியதாகவும், மற்றும் தெளிவில்லாமலும் இருக்கும் ஆதலால் இந்த போட்டோக்களை பெரிது படுத்தி பார்க்க அந்த படத்தின் மீது க்ளிக் செய்து பார்த்தால் தான் முடியும். ஒருசில போட்டோக்களை க்ளிக் செய்தாலும் பெரியதாக வருவதில்லை. இது போல நாம் ஒவ்வொரு படத்தையும் நாம் க்ளிக் செய்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் அந்த படம் லோடு ஆகி வருவதால் இந்த பதிவு மறைந்து விடும் திரும்பவும் பதிவை திறக்க வேண்டும் இப்படி பல பிரச்சினைகள் உள்ளது.
இந்த பிரச்சினைகளை தீர்க்கவே இந்த சிறப்பான நீட்சி நமக்கு பயன் படுகிறது.
  • இந்த நீட்சியை நிறுவிய பின்பு படத்தின் மீது நம் மவுசின் கர்சரை நகர்த்தினால் போதும் உடனே அந்த படம் பெரியதாக வந்து விடும்.
  • இது அனைத்து சமூக தளங்களிலும் நன்றாக வேலை செய்கிறது.
  • இதன் மூலம் பேஸ்புக்கில் உள்ள நம் நண்பர்களின் சிறிய புகைப்படங்களை கூட பெரியதாக பார்க்க முடியும்.
பிளாக்கரில் பெரியதாக பேஸ்புக் நண்பர்கள் பகுதியில் பெரியதாக 


ட்விட்டர் நண்பர்கள் பகுதியில் பெரியதாக 


  • இந்த நீட்சியின் பயன் சிறப்பாக உள்ளதா இன்னும் ஏராளமான தளங்களில் இப்படி பெரிதாக்கி பார்க்க முடியும். 
  • இதன் மூலம் jpg, png,bmp பைல்களை மட்டுமே பெரியதாக பார்க்க முடியும். அனிமேசன் (.gif) பைல்களை பார்க்க முடியாது. 
  • இந்த நீட்சியை தரவிறக்க கீழே உள்ள பட்டனை அழுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டுடே லொள்ளு 


நைட்டு அடிச்சது இன்னும் தெளியலையே முதல்ல ஒரு கட்டிங் போட்டாதான் சரிவரும் போல.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments