Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத்து வைக்க

நாம் சில முக்கியமான பைல்களை நம் கணினியில் பாதுகாக்க பல முறைகளை கையாளுவோம் அந்த வகையில் இந்த முறையும் சிறந்த முறையே அதாவது ஏதேனும் ஒரு போட்டோவின் பின்புறத்தில் நம்முடைய முக்கியமான பைல்களை மறைத்து வைக்கலாம். சாதரணமாக அந்த பைலை ஓபன் செய்தால்  போட்டோ மட்டுமே தெரியும் அதற்கு பின்னால் இருக்கும் உங்களின் பைல்கள் தெரியாது. Winzip, Winrar ஆகிய மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே பின்புறத்தில் உள்ள பைல்களை பார்க்க முடியும்.
  • இதற்கு முதலில் நீங்கள் மறைக்க விரும்பும் பைல்களை மொத்தமாக Compress செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் கொள்ளுங்கள்.
  • இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை டவுன்லோட் செய்தவுடன் நேரடியாக இயக்கலாம்.  
  • அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.  அதில் picture என்ற கட்டத்தில் உங்களின் ஏதோ ஒரு படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். 
  • அடுத்து Compressed file என்ற இடத்தில் நீங்கள் compress செய்து வைத்து இருக்கும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • Output Picture file என்ற இடத்தில் ஒரு jpg பைலை தேர்வு செய்து இதில் நீங்கள் மேலே Picture பகுதியில் கொடுத்த அதே பைலை கூட தேர்வு செய்து கொள்ளவும். அப்படி கொடுத்தால் Replace செய்ய வேண்டும் என்ற செய்தி வரும் அதில் Yes கொடுத்து விடுங்கள்.
  • இப்பொழுது நீங்கள் அந்த மூன்று கட்டங்களையும் நிரப்பியவுடன் அங்கு உள்ள Ok கொடுத்து விடுங்கள்.
  • அந்த OK பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு ஒரு செய்தி வரும் உங்களுடைய பைல்கள் மறைக்க பட்டது என செய்தி வரும் அதை OK கொடுத்து வந்திருக்கும் உங்கள் பைலை சாதரணமாக ஓபன் செய்து பாருங்கள்.
  • வெறும் படம் மட்டுமே தெரியும்.  பின்னால் இருக்கும் நம் பைல்கள் யாருக்கும் தெரியாது. அதை Winzip அல்லது Winrar மென்பொருட்களில் ஓபன் செய்தால் மட்டுமே அந்த போட்டோவின் உள்ளே இருக்கும் பைல்களும் தெரியும் அதை நாம் உபயோகித்து கொள்ளலாம்.
  • இது போல் நம் பைல்களை வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராமல் நம் ரகசிய பைல்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.




டுடே லொள்ளு 
ஓட்டும் கருத்தும் போட்டாச்சா அப்ப டாட்டா.. பாய்... போயிட்டு வாங்க  

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. ஒரு அரிதான தகவல். நன்றி சசி.

    ReplyDelete
  2. வழக்கம் போல இன்னிக்கும் நல்ல தகவல் தந்து அசத்திட்டீங்க! டுடே லொள்ளு.....! ஹி.... ஹி.... லாரன்ஸ் மாஸ்டர் ஸ்டேப் எடுக்குறாரு!! சூப்பர்!!

    ReplyDelete
  3. ரசியங்களை காக்க அருமையான வழி. என்னிடம் ஒன்றுமில்லை. சரி, வேறு யாரும் இதேமுறையில் திறக்க வழி உள்ளதே. பாஸ் வோர்ட் போன்ற வசதிகள் இல்லையே சசி?சரிதானா??

    ReplyDelete
  4. >>>ஓட்டும் கருத்தும் போட்டாச்சா அப்ப டாட்டா.. பாய்... போயிட்டு வாங்க

    haa haa ஹா ஹா .. அதெல்லாம் முடியாது.. நாங்க இங்கே தான் இருப்போம்

    ReplyDelete
  5. புதுமையான தகவல் பகிர்வுக்கு நன்றி :)

    ReplyDelete
  6. புதுமையின் சிகரமே இதுவும் அற்புதம் மிக்க நன்றி

    இன்னும் காத்திருக்கிறேன் தங்களின் பதிலிக்காக.......(உங்களுக்கு மட்டும் புரிந்தால் போதும்)

    ReplyDelete
  7. நல்ல தகவல் ..நன்றி ... :)

    ReplyDelete
  8. நல்ல தகவல் ..நன்றி ... :)

    ReplyDelete
  9. அவசியமான தகவல் ...
    நன்றி

    ReplyDelete
  10. சூப்பர் பாஸ்..
    நன்றி...

    ReplyDelete
  11. நண்பரே, ஒரு உதவி தேவை..ஒரு முக்கியமான எக்ஸெல் ஃபைலை ஆஃபிஸில் ஒருவர் பாஸ்வேர்ட் போட்டு பூட்டிவிட்டு, ரிசைன் செய்து பறந்துவிட்டார். அதை திறக்கவே முடியவில்லை..தங்களுக்கு ஏதேனும் சாஃப்ட்வேர் தெரிந்தால் சொல்லவும்..நன்றி.

    ReplyDelete
  12. மிக்க நன்றி !! இதுபோல் 1 gp 2 gp அளவுள்ள பைல்கலை hide செய்ய என்ன software உள்ளது!!

    ReplyDelete
  13. மிக்க நன்றி !! இதுபோல் 1 gp 2 gp அளவுள்ள பைல்கலை hide செய்ய என்ன software உள்ளது??

    ReplyDelete
  14. நாற்பது நாள் தான் இருக்கும் என்று டவுன்லோடு பண்ணியதும் சொல்கிறதே.. பின் அதுவே ரிமூவ் ஆகி விடுமாமே.. அதை சொல்லவே இல்ல...நீங்க..

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press