பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். கூகுளை போலவே இதிலும் பல்வேறு வசதிகள் குவிந்து காணப்படுகின்றன இதில் ஒன்று தான் இந்த apps. அதாவது பேஸ்புக்கில் நமக்கு தேவையான வசதியை அதற்கேற்ற apps நம் பேஸ்புக்கில் இணைத்துவிட்டால் அந்த வசதியை பெறலாம்.
- இதற்க்கு முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- கணக்கு(Settings) பகுதியில் க்ளிக் செய்து ரகசியகாப்பு அமைப்புகள்(Privacy Settings) என்பதை க்ளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுக்கு வேறு பக்கம் ஓபன் ஆகும் அதில் கீழே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Edit your Settings என்பதை க்ளிக் செய்யவும்.
- பிறகு உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்கள் எத்தனை பிற தள மென்பொருட்கள் உபயோக படுத்துகிறீர்கள் என்ற விவரம் வரும் அதில் உள்ள அமைப்புகள் திருத்தவும் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
- பின்பு அடுத்த பக்கம் ஓபன் ஆகும் அதில் உள்ள உங்கள் பேஸ்புக்கில் நீங்கள் இணைத்துள்ள மென்பொருட்கள், விளையாட்டுக்கள், இணைய தளங்கள் ஆகிய லிஸ்ட் இருக்கும். இதில் நீங்கள் நீக்க நினைக்கும் apps க்கு நேராக உள்ள பெருக்கல் குறியை க்ளிக் செய்யவும்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் அதில் உள்ள Remove என்பதை க்ளிக் செய்யவும்.
- Remove பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் அந்த மென்பொருள் உங்கள் பேஸ்புக் கணக்கில் இருந்து நீங்கி விடும்.
- நீங்கியவுடன் உங்களுக்கு ஒரு கீழே இருப்பதை போல செய்தி வரும்.
- இது போன்று உங்களுக்கு தேவையில்லாத Apps உங்கள் பேஸ்புக்கில் இருந்து நீக்கி விடுங்கள்.
டுடே லொள்ளு
ஒடம்புல ஒட்டு துணி கூட போடாம நடந்து போற ஸ்டைல பாரு
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments