Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Smart Labels

தற்போது கணினி உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதில் குறிப்பாக செய்தி பரிமாற்றத்திற்கு மெயில்களை பயன்படுத்துவது அதிகரித்து கொண்டே போகிறது. கூகுள் வழங்கும் மெயில் நிறுவனமான ஜிமெயிலை பெரும்பாலனாவர்கள் உபயோகித்து கொண்டு இருக்கிறோம். இதில் நமக்கு வரும் மெயில்களை தனி தனியாக பிரித்து அறிந்து கொள்ள லேபில் வசதியை பயன்படுத்துகிறோம். இருந்தும் பல லேபில்கள் உருவாக்குவதால் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள சிரமம் உள்ளது. 
  • இந்த பிரச்சினையை தீர்க்க ஜிமெயிலில் ஒரு புதிய வசதி வந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட லேபிளுக்கு குறிப்பிட்ட நிறத்தை தேர்வு செய்து விடலாம்.  
  • தேர்வு செய்து விட்டால் ஒவ்வொரு லேபிளில் வரும் ஈமெயிலும் அதற்கென தனி நிறத்தில் காட்சி அளிக்கும்.
  • உங்கள் ஜிமெயில் லேபில் பகுதியில் ஒரு சிறிய கட்டம் போன்ற பகுதி தெரியும். அதில் க்ளிக் செய்தால் கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும். 
  • அந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளவும். அதில் உள்ள நிறங்கள் பிடிக்கவில்லை என்றால் Add Custom Color என்பதை க்ளிக் செய்து தேவையான நிறத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • இப்படி ஒவ்வொரு லேபிளுக்கும் ஒவ்வொரு நிறத்தையும் தேர்வு செய்து விடவும்.
  • இப்பொழுது உங்களுக்கு வரும் மெயில்கள் அந்தந்த லேபில்களின் நிறங்களில் காணப்படும். 
  • இனி நிறங்களை வைத்தே உங்களின் மெயில் வகையை எளிதாக கண்டறியலாம். 
டுடே லொள்ளு 


டாக்டர் டெய்லி வாக்கிங் போக சொல்லி பேஜார் பன்றாருப்பா நம்ப உடம்பு நமக்கு முக்கியமாச்சே என்ன பண்ண 


ஜிமெயில் தொடர்புடைய இடுகைகள்: 
  1. ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க
  2. ஜிமெயில் கணக்கில் உங்களின் பேஸ்புக்கை கொண்டுவர
  3. ஜிமெயிலில் பயனுள்ள புதிய வசதி - Incoming Mail and Chat Alert
  4. ஜிமெயிலில் மற்ற ஐடிகளுக்கு வரும் மெயிலின் காப்பியை வரவைக்க
  5. ஜிமெயிலில் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

  1. வழக்கம் போல உபயோகமான பதிவு!



    சசி !



    " உங்களைப் பார்த்தே டிசைன் செய்தோம் "



    எங்கள் ப்ளாக் ஐ!

    ReplyDelete
  2. ஓ.வ.நாராயணன் சொல்லியது மிகவும் பொருத்தமானதே...! நாமும் அவர் கருத்துக்கு உடன்படுகிறோம்.. நன்றி! சசி!

    ReplyDelete
  3. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி :)

    ReplyDelete
  4. sasi.. டுடே லொள்ளு செம.. நீங்க வாக்கிங்க் போறீங்களா?

    அப்புறம் நீங்க பள்ளிபாளையம் வந்தும் ஈரோடு வராததால் உங்களை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு பண்றேன்

    ReplyDelete
  5. அன்பின் சசி மிக பயனுள்ள பதிவு.மேலும் மெயில்களை பெயா் வாாியாக வைக்க (அல்பபெட்)வைக்க ஏதும் வசதி உண்டா என்பதை அறியத்தாருங்களேன். தோழமையுடன்

    ReplyDelete
  6. @சி.பி.செந்தில்குமார்

    நண்பரின் திருமணதிற்கு நான் மட்டுமில்லாமல் என்னுடன் நிறைய நண்பர்கள் வந்திருந்ததால் அவர்களை விட்டு வர முடியவில்லை. அடுத்த முறை வந்தால் கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  7. உபயோகமுள்ள பதிவு.

    ReplyDelete
  8. என்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் . அதை எப்படி Recover
    செய்வது.

    SAKTHISTUDYCENTRE.BLOGSPOT.COM

    ReplyDelete
  9. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    http://nimzath.blogspot.com/2011/03/blog-post.html

    ReplyDelete
  10. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  11. நன்றி சகோதரம் நான் ஏற்கனவே முயற்சித்தேன் அருமையாக இருந்தது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

    ReplyDelete
  12. இது குறித்து நீங்கள் பதிவு ஏதும் எழுதியுள்ளீர்களா?

    ReplyDelete
  13. //என்னுடைய பிளாக்கை யாரோ டெலிட் செய்துவிட்டார்கள் . அதை எப்படி Recover செய்வது.//

    இது குறித்து நீங்கள் பதிவு ஏதும் எழுதியுள்ளீர்களா?

    ReplyDelete
  14. ஒரே நேரத்தில் பல ஜிமெயில் அட்டாச்மெண்ட் பைல்களை டவுன்லோட் செய்ய வாய்ப்பிருக்கிறதா நண்பரே?

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press