Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பிளாக்கில் புதிய அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் இணைக்க

 பேஸ்புக் கூகுளுக்கு இணையாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு சமூக இணைய தளம். இதில் உள்ள பல எண்ணற்ற வசதிகளால் பேஸ்புக் தளம் பெரும்பாலானவர்களை அடிமையாக்கி வைத்திருக்கின்றது. சிலர் காலையில் எழுந்து காப்பி குடிக்கிறாங்களோ இல்லையோ இந்த பேஸ்புக் தளத்தை பார்வையிடாமல் இருக்க மாட்டார்கள். இந்த தளம் பதிவர்களுக்கு பல பயனுள்ள விட்ஜெட்டுக்களை வழங்கி வருகிறது. Like Button , Like Box, Send Button இன்னும் பல வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வசதிகளில் நாம் புதிய வகை அனிமேட்டட் Like Box விட்ஜெட் எப்படி நம் பிளாக்கில் இணைப்பது  என காண்போம்.

இரண்டு சுலபமான படிகளில் நாம் இந்த விட்ஜெட்டை நம் பிளாக்கில் சேர்த்து விடலாம்.

முதல் படி:
 • முதலில் உங்கள் பிளாக்கர் அகௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
 • Dashboard - Design - Edit Html - பகுதிக்கு சென்று </head> இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.
 • கோடிங்கை கண்டுபிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த </head> கோடிற்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.
<script src="https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js" type="text/javascript"></script>
 • இந்த கோடிங்கை சரியான இடத்தில் சேர்த்தவுடன் டெம்ப்ளேட்டை Save செய்யுங்கள்.
இரண்டாம் படி:
 • கீழே உள்ள கட்டத்தில் உங்கள் பேஸ்புக் பக்கத்தின் URL கொடுத்து Add to Blogger என்ற என்ற பட்டனை அழுத்தவும்.   Your Facebook Page URL :  Add to Blogger அழுத்தியவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய பிளாக் பட்டியல் இருக்கும் அதில் எந்த பிளாக்கில் இந்த விட்ஜெட்டை இணைக்க விரும்புகிறீர்களோ அந்த பிளாக்கை தேர்வு செய்து கீழே உள்ள Add Widget என்பதை கொடுத்துவிட்டால் போதும் உங்களுடைய பிளாக்கில் விட்ஜெட் சேர்ந்து விடும்.


  அவ்வளவு தான் புதியவகை அனிமேட்டட் விட்ஜெட் நம் பிளாக்கில் சேர்ந்து விடும்.

  UPDATE

  அனைவரின் கவனத்திற்கு பேஸ்புக்கின் பக்க முகவரியை தான் கொடுக்க வேண்டும் மாறாக Profile URL கொடுத்தால் கீழ் கமென்ட் பகுதில் கூறியுள்ள பிழை செய்தி தான் வரும்.  
  Thanks: way2blogging


  டுடே லொள்ளு 
  இந்த குத்து குத்துறாரே யாருப்பா குரு இவருக்கு ஒருவேளை நம்ம T.R இருக்குமோ 

  சசிகுமார்

  இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

  21 comments :

  1. எங்க ரெண்டு நாளா ஆளைக் காணோம்..

   ReplyDelete
  2. thamizmanam


   Your Blog is Aggregated under FREE Aggregation Category

   புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

   இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

   - ஆன்லைனில் MP3 பைல்களை சுலபமாக வெட்ட - Online free MP3 cutter
   - கூகுளின் புதிய பயனுள்ள வசதி - Search by Image
   - செல்போன் கதிர்வீச்சு நம்மை தாக்காதவாறு தடுக்க சில வழிமுறைகள்
   - இந்திய மொபைல்களுக்கு Anonymous SMS இலவசமாக அனுப்ப
   - பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்கள்,சிறுகதைகள் இலவசமாக டவுன்லோட் செய்ய

   சன்னலை மூடு

   ReplyDelete
  3. இந்த பிளாக் ஓனர் காணவில்லை..
   எனக்கு பதி சொல்லாத சசி .. கடத்தல்..

   ReplyDelete
  4. Plugin cannot be rendered with the specified parameters.
   இணைத்தால் இந்த மெசேஜ் வருது என் ப்லோக்கில். என்ன செய்ய?

   ReplyDelete
  5. தமிழ்வாசி - Prakash said...
   June 22, 2011 1:12 PM

   Plugin cannot be rendered with the specified parameters.
   இணைத்தால் இந்த மெசேஜ் வருது என் ப்லோக்கில். என்ன செய்ய?/// எனக்கும் இவ்வாறு தான் வருகிறது ..என்ன தீர்வு ..?

   ReplyDelete
  6. வணக்கம் சசி,

   இந்த ஆப்சனை இணைத்தால்,

   Plugin cannot be rendered with the specified parameters.

   என்று வருகிறது ..

   என்ன செய்வது ?

   ஏற்கனவே தமிழ்வாசி, கந்தசாமி ஆகியோரும் இதே கருத்தை சொல்லியிருக்கிறார்கள் போல..

   ஓகே.. வழி காட்டுங்கள்

   நன்றி.

   ReplyDelete
  7. @சிவ.சி.மா. ஜானகிராமன்

   எந்த இடத்தில் இந்த பிரச்சினை வருகிறது. பல முறை சோதித்து விட்டேன் சரியாக தான் வருகிறது.

   ReplyDelete
  8. @சிவ.சி.மா. ஜானகிராமன்

   நண்பர்களே இந்த முறையில் இணைக்கும் போது பிழை ஏற்ப்பட்டால் Add Widget என்பதற்கு மேலே உள்ள Edit content என்பதை க்ளிக் செய்து அங்கு உள்ள கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Html javascript பகுதியில் நேரடியாக சேர்த்து விடுங்கள்.

   ReplyDelete
  9. சசியின் ஸ்பெசாலிட்டியே இது தான்,,,

   அதிரடியாக, சுடச் சுடப் புதிய தகவல்களை அறிமுகப்படுத்துவது,
   இந்த வரிசையில் தற்போது நீங்கள் தந்திருப்பது இந்த பேஸ்புக் விட்ஜெற்..

   பகிர்விற்கும், அறிமுகப்படுத்தலுக்கும் நன்றி,,

   டுடே லொள்ளு..
   ஆமா பிரேக் டான்ஸ் ஆடும் நபரின் குழுவில் நீங்க கூட இப்போது சேர்ந்திருப்பதாக தகவல்கள் பரவுகின்றனவே, உண்மையா பாஸ்.

   ReplyDelete
  10. //கந்தசாமி. said...
   சிவ.சி.மா. ஜானகிராமன் said...
   தமிழ்வாசி - Prakash said...//

   அப்பாடா பிரச்சினை எங்கன்னு கண்டுபிடிசிட்டேன். நண்பர்களே பேஸ்புக்கின் பக்க(page) URL கொடுக்க வேண்டும். Profile URL கொடுக்க கூடாது நண்பா.

   ReplyDelete
  11. facebook பக்க url என்றால் என்ன?புரியல.விளக்கவும்.எனது ப்ளாக்கில் இணைத்தபோது இப்படி உள்ளது.பார்க்க
   http://aagamakadal.blogspot.com

   ReplyDelete
  12. ரொம்ப நன்றி சசி...

   ReplyDelete
  13. நீங்கள் ஏன் இரண்டு இடத்தில் facebook பேன் பாக்ஸ் இணைத்து உள்ளீர்கள். ஒன்றை எடுத்து விடலாமே?

   ReplyDelete
  14. வணக்கம் தோழர் சசி! நமது பிளக்கில் பேஸ்புக் அனிமேட்டட் பட்டனை இணைக்க,பிளாக்கின் மின்னஞ்சலை உடைய ஜி மெயில் முகவரி போதுமானதா? அல்லது நாம் இணைக்கவிருக்கும் பேஸ்புக்கின் ஜி மெயில் முகவரி தேவையா?(அதாவது எனது பிளாக் வேறு ஜி மெயில் முகவரியிலும்,பேஸ்புக் வேறு மெயில் முகவரியிலும் உள்ளது)

   ReplyDelete
  15. பதிவிற்கு நன்றி

   பலமுறை சோதித்து பார்த்துவிட்டேன்
   பிழை வருகிறது

   //Could not retrieve id for the specified page. Please verify correct href was passed in.//

   உதவி தேவை நண்பரே..

   நட்புடன்
   சம்பத்

   ReplyDelete
  16. sasi sir,Could not retrieve id for the specified page. Please verify correct href was passed in.
   what is the problem
   daniel prince

   ReplyDelete

  Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press