Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பயன்பெறும் கூகுளின் புதிய வசதி

கூகுள் இணையத்தின் ஜாம்பவான் அடிக்கடி பல்வேறு வசதிகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி அளிக்கும். அந்த வகையில் தமிழர்கள் உட்பட மேலும் ஐந்து மொழிகளை Google Translate பகுதியில் சேர்த்து  பெரும்பாலான இந்தியர்களுக்கு பயனளித்துள்ளது. இதற்க்கு முன்னர் இந்த Google Translate பகுதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இப்பொழுது அதிகரித்து வரும் வாசகர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தமிழ்,தெலுங்கு,கன்னடம்,பெங்காலி மற்றும் குஜராத்தி போன்ற ஐந்து மொழிகளுக்கு கூகுளின் இந்த translate வசதி புகுத்தப்பட்டுள்ளது.


கூகுள் மொழிமாற்றம் (Google Translate) என்றால் என்ன: 
பெயரிலேயே இதன் அர்த்தம் தெரிந்திருக்கும் ஆம் இணையத்தில் பல்வேறு மொழிகளில் இணைய தளங்கள் உள்ளன. இந்த தளங்களை படிக்க நாம் அந்த மொழியை தெரிந்திருக்க வேண்டியதில்லை Google Translate உதவியுடன் நமக்கு தெரிந்த மொழியில் மாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.

இந்தியர்கள் எவ்வாறு பயன்பெறுவார்கள்:
இதற்க்கு முன்னர் கூகுள் மொழிமாற்ற வசதியில் இந்திய அளவில் ஹிந்தி மொழி மட்டுமே இருந்தது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஹிந்தி பேசினாலும் படிக்க தெரிந்தவர்கள் குறைவே. ஆதலால் நமக்கு புரியாத ஆங்கிலத்தில் மொழியை மாற்றி தப்பும் தவறுமாக படித்து தெரிந்து கொள்வோம். இனி அந்த வேதனை நமக்கில்லை நம்முடைய தாய்மொழியான தமிழிலே மொழியை மாற்றி நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இது போல மொழியை மாற்றும் பொழுது வாக்கியங்கள் சரியாக அமையாது ஆனால் அதனுடைய உள்கருத்தை நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது :
  • இந்த சேவையை பயன்படுத்த கூகுளின் Google Translate இந்த தளத்திற்கு சென்று அங்கு உள்ள காலியான கட்டத்தில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும். 
  • பின்பு TO பகுதியில் நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய மொழியை தேர்வு செய்தால் போதும் அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த மொழியில் மொழிமாற்றம் செய்யப்படும். 
  • இது மட்டுமல்லாது நீங்கள் மாற்றம் செய்யப்பட எழுத்துக்களின் மீது உங்கள் கர்சரை வைத்தால் அந்த எழுத்துக்கான ஒரிஜினல் வார்த்தையும் காண்பிக்கப்படும். 
  • Hightlight செய்த வார்த்தைகளை பற்றி விரிவாக அங்கிருந்தே நேரடியாக கூகுளில் தேடிக்கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 
  • முழு இணையதளத்தையும் மொழிமாற்றம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் அந்த மற்ற தளங்களுக்கு சென்று அங்கு உள்ள translate பாரில் நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழியை தேர்வு செய்து Translate கொடுத்தால் முழு தளமும் தமிழில் மாறிவிடும்.


எத்தனை மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாம்:
உலகளவில் சுமார் 63 மொழிகளில் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மாற்றம் செய்து கொள்ளலாம். கீழே நீங்கள் மொழிமாற்றம் செய்யும் பட்டியல் உள்ளது இதில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த பட்டியலில் உள்ள மொழிகளில் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். 

டுடே லொள்ளு 



உன் பிளாக்ல போடுற அளவுக்கு நான் கேவலாம் போயிட்டேனே, இனி நான் இருக்கிறத விட சாவதே மேல்...

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

19 comments :

  1. மிக்க நன்றி. உடனடியாக பரிட்சித்து பார்த்தேன். மொழி மாற்றம் சுலபமாக உள்ளது

    ReplyDelete
  2. அண்ணே! சொன்னாலும் சொன்னிங்க... செம பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  3. உண்மையில் பெருமைப்படக்கூடிய விஷயம் தான்...

    இந்த கூகுலின் வசதியால் கண்டிப்பாக பயன்அடையலாம்..

    ReplyDelete
  4. எங்களமாதிரி மக்குங்களுக்காகவே இதை கூகிள் மேம்படுத்தரான்களோ?
    தகவலுக்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  5. அருமையான தகவல்..

    Thanks boss... :)

    ReplyDelete
  6. நல்ல தகவல் நண்பா.
    தேவையான செய்திதான் இந்த செய்தி பரவலாக்கம் பெற பலரும் பதிவு வெளியிட்டாலும் தவறில்லை நண்பா.

    ReplyDelete
  7. சூப்பர் பாஸ் தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete
  8. சசி!பயனுள்ள தகவல்களாய் தருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல் அதை விளக்கிய விதம் அருமை நன்றி

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள தகவல் .
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  11. மிகவும் விருப்பத்திற்கரிய பதிவு மிக்க நன்றிகள்..


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தொலைக்கப்பட்ட உயிர்களும் பிழைத்து நிற்கும் பிணங்களும்

    ReplyDelete
  12. சசி.. பதிவு சூப்பர்தான் ஆனா லொள்ளுதான் பயமா இருக்கு..:)

    ReplyDelete
  13. கூகிள் தரும் இந்த வசதியைப் பலரும் அறியச் செய்த தங்களின் நல்ல மனதைப் பாராட்டுகிறேன்.
    நன்றி நண்பரே.

    kadavulinkadavul.blogspot.com

    ReplyDelete
  14. சகோ, நேற்றே இந்த கூகிள் மொழி பெயர்ப்பு அறிமுகம் பற்றிய புதிய தகவலை செய்தித் தளம் ஒன்றில் பார்த்தேன், அப்பொழுதே நினைத்தேன்,
    சசியின் அடுத்த பதிவு இதுவாகத் தான் இருக்கும் என்று,

    அதனை நீங்க நிரூபித்திருப்பதோடு,
    மேலதிக விளங்களையும் தந்திருக்கிறீங்க சகோ.
    நன்றிகள்.

    ReplyDelete
  15. அருமை சசி. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  16. கணிணி குறித்த தகவல் எதுவாக இருப்பினும் தமிழில் உடனுக்குடன் கிடைக்கும் முன்னணித் தளங்களுள் தாங்கள் சிறப்பு வாய்ந்தவராக இருக்கின்றீர்கள் எனில் அது மிகையாகாது. தொடரட்டும் தங்கள் அறிவியற் தமிழ்ச் சேவை!

    ReplyDelete
  17. "பதிவைப் படி பின்னே, டுடே லொள்ளுவைக் காண்க முன்னே" - உங்களின் நகைச்சுவை உணர்விற்க்கு "டுடே லொள்ளு"வே சான்று!

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press