சினிமா நடிகர்களின் கிரிக்கெட் போட்டியை இணையத்தில் லைவாக காண - CCL T20 LIVE

இந்தியா கிரிக்கெட் விளையாட்டின் அடிமை என்று கூறலாம். வேறு எந்த போட்டிக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்திய மக்கள் கிரிக்கெட் போட்டிக்கு கொடுக்கின்றனர். தோல்வியின் அதிர்ச்சியில் உயிரை விட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த அளவுக்கு தீவிரமாக கிரிக்கெட்டை காதலிக்கின்றனர். கிரிக்கெட்டிற்கு அடுத்து இந்தியர்களை வெகுவாக கவர்ந்தது சினிமா. இந்த இரண்டு விஷயங்களுக்கும் இந்தியர்கள் அடிமை என்றே கூறலாம்.  இதில் இன்னும் சுவாரஸ்யமாக இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். அது தான் சினிமா நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி CCL T20. 20 ஓவர்களை கொண்ட இந்த போட்டி கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது வெற்றிகரமாக இரண்டாவது சீசன் இந்த வருடம் நடந்து கொண்டுள்ளது. இந்த போட்டியை இணையத்தில் லைவாக காண்பது என பார்க்கலாம்.

நேற்று நடந்த கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் நடந்த போட்டியை காணாதவர்கள் கீழே உள்ள வீடிவோவில் முழு போட்டியையும் கண்டு ரசியுங்கள்.போட்டியில் பங்கேற்கும் அணிகள்:
  • Mumbai Heroes
  • Telugu Warriors
  • Chennai Rhinos
  • Karnataka Bulldozers
  • Kerala Strikers
  • Bengal Tigers
என ஆறு அணிகள் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிகளை இணையத்தில் லைவாக காணும் வசதியை CCL அமைப்பு உருவாக்கி உள்ளது.

இந்த போட்டிகளை இணையத்தில் நேரடி லைவாக காண - CCL T20 LIVE

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments