Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

அலெக்சாவில் அசத்தும் தமிழ் பதிவர்கள் 2011 - Top Tamil blogs and bloggers

வலைப்பூக்களில் எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. மொழி பாகு பாடு இன்றி அவரவர்க்கு தெரிந்த மொழிகளில் வலைப்பூக்களில் எழுத்துகின்றனர். ஆனால் ஆங்கில வலைத்தளங்களுக்கு ஏராளாமான திரட்டிகளும், தேடியந்திரங்களும், சமூக தளங்களும் கை கொடுக்கும் நிலையில் வெறும் சில திரட்டிகளின் உதவியுடன் அலேக்சாவில் சாதிக்கும் தமிழ் பதிவர்களை பற்றி இங்கு காண்போம். பல ஆங்கில தளங்களையும் முந்தி கொண்டு நாங்களும் உங்களுக்கு இளைத்தவர்கள் இல்லை என சவால் விடும் வகையில் அலெக்சா ரேங்கில் 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள பதிவர்களை அனைவரும் வாழ்த்துவோம்.


6. வேடந்தாங்கல் 
வலைப்பூவின் ஆசிரியர் கரூண். பதிவுலகில் என் நெருங்கிய நண்பர்களில் இவரும் ஒருவர். ஒரு வருடமாக தான் பதிவுகள் எழுதி வருகிறார். சூடான அரசியல் செய்திகளை அள்ளி விடுவதில் வல்லவர். இவருடைய கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான்கே வரிகளில் கவிதை எழுதி அசத்துவார். பதிவுலகில் பல பிரச்சினைகள் வந்தாலும் அதையெல்லாம் த்தூ.. என்று உதறி தள்ளிட்டு அடுத்த பதிவு எழுத ஆரம்பித்து விடுவார். நான் முதன் முதலில் நேரில் சந்தித்த பதிவரும் இவரே.
தற்போதைய அலெக்சா மதிப்பு - #98,092

5. நாற்று
சமீப காலமாக நான் விரும்பி படிக்கும் தளங்களில் இதுவும் ஒன்று. வலைப்பூவின் ஆசிரியர் இலங்கை நண்பர் நிரூபன். பல தரப்பட்ட பதிவுகளை வலைப்பூவில் பகிர்ந்து வருகிறார். புதிய பதிவர்களுக்கு ஏற்ப்படும் தொழில்நுட்ப சந்தேகங்களை மனம் கோணாமல் சொல்லி தரும் அன்பு நண்பர். தமிழ்மண மகுடத்தை தொடர்ந்து பல நாட்களாக வாங்கி வந்தவர். மற்றும் ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் மற்ற புதிய பதிவர்களை அறிமுக செய்து வைக்கிறார்.
தற்போதைய அலெக்சா மதிப்பு - # 86,008


4. ஜாக்கி சேகர்
அண்ணனை பற்றி என்ன சொல்றது நச்சுன்னு சொல்லனும்னா பதிவுலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம். உள்ளூர் சினிமா முதல் வெளிநாட்டு சினிமா வரை எல்லாமே இவருக்கு அத்துப்படி. சாதாரண பேச்சு வழக்கில் எழுதுவது இவரின் ஸ்டைல். அதுவே பல வாசகர்களை இவரின் தளத்தில் கட்டி போட்டு உள்ளது. சினிமா பதிவர்கள் மட்டுமின்றி பல விழிப்புணர்வு பதிவுகளும் எழுதி உள்ளார். இவர் சிறந்த போட்டோகிராபர்(யாருக்கேனும் தேவை என்றால் இவரை அணுகவும்). தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதல் தொடர்பு கொள்ளும் நபர் இவர் தான்.
இவருடைய தற்போதைய அலெக்சா ரேங்க்# 77,003

நம்ம மாப்ளைய தெரியாம யாராவது இருக்க முடியுமா என்ன. பதிவுலகத்தில் ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கியவர். பிளாக் ஆரம்பித்து குறைந்த நாட்களிலேயே தனது கடின உழைப்பால் இந்த இலக்கை அடைந்தவர். இவரை பற்றி பல விமர்சனங்களும், கிண்டல்களும் வந்தாலும் அனைத்திற்கும் ஹீ ஹீ ன்னு கூலா ஒரு கமென்ட் போட்டுட்டு போய்கிட்டே இருப்பார். இவர் கிட்ட எனக்கு புடிச்சது இந்த மனப்பக்குவம் தான்.(இவரையே டெண்சனாக்கிய புரட்சிக்காரன என்ன சொல்றது). தமிழ்மணத்தில் நம்பர் 1 மகுடம் பெரும்பாலும் இவருக்கே.
இவருடைய தற்போதைய அலெக்சா ரேங்க்# 61,953


2. கேபிள் சங்கர்
இவரை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. பதிவுலகின் ஹீரோ இவர் தான். பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தன்னுடைய சினிமா விமர்சனம் மூலம் மிகப்பெரிய வாசகர் படலத்தையே பதிவுலகில் வைத்து உள்ளார். பல புத்தகங்களையும் எழுதி உள்ளார். இன்னொரு பாராட்டக்குரிய விஷயம் புதியதாக ஆரம்பிக்கப்பட்டு வெற்றி பாதையில் வலம் வந்து கொண்டிருக்கும் உடான்ஸ் திரட்டி இவருடையது தான். 

இவரின் அலெக்சா ரேங்க் #59,848 

இந்தியாவின் அல்லது தமிழகத்தின் விக்கி லீக்ஸ் என அழைக்கப்படும் தளம். அதிகாரவர்க்கத்தின் அநியாயங்களையும், ஊழல்களையும் தனது சவுக்கின் மூலம் தோலுரித்து காட்டுகிறார். இவருடைய தனி சிறப்பே எந்த பதிவு எழுதினாலும் அதற்க்கான ஆதாரங்களையும் சேர்த்து வெளியிடுவது தான். இந்த தளத்தின் ஆசிரியர் சங்கர் இது போன்று பதிவுகள் போடுவதால் கடந்த தி.மு.க. ஆட்சியில் போலிசால் கைது செய்யப்பட்டார். ஆனாலும் தனது சவுக்கு வீசுவதை நிறுத்த வில்லை இவர். தப்பு செய்பவர்களின் பக்கம் இந்த சவுக்கு தொடர்ந்து வீசிக்கொண்டே இருக்கும்.

இவருடைய தற்போதைய அலெக்சா ரேங்க் # 41,474


டிஸ்கி: இந்த பட்டியலில் 1 லட்சத்திற்கும் குறைவாக அலெக்சா மதிப்பை பெற்றவர்களின் வலைப்பூக்கள் ஏதேனும் விட்டிருந்தால் கருத்துரையில் தெரிவிக்கவும். அப்டேட் செய்து கொள்கிறேன்.


Tech Shortly

How to activate new Google Menu Bar in Chrome,Firefox and IE

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

29 comments :

 1. நல்ல பதிவு தோழரே தொடரட்டும் பணி

  ReplyDelete
 2. //@சி.பி.செந்தில்குமார்
  சசி, வேலன் இருக்காரே?//

  இல்ல சிபி இப்ப அவரோடது 3 லட்சத்தை தாண்டி விட்டது.

  ReplyDelete
 3. மாப்ளே உன் தன்னடக்கம் என்னை என்னவோ செய்யுது...
  ஆமா, நீ அலாஸ்கா ரேங்க் 44160 இருக்கியே...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 4. வணக்கம் மச்சி,

  இந்தப் பட்டியலில் பிரகாஷ் சொல்வது போல நம்ம சசி எங்கே போயிட்டாரு?

  ஹி...ஹி...

  ReplyDelete
 5. இதில் நாற்று, ஜாக்கி ஓகே நண்பா...சவுக்கு பற்றி சரியான புரிதல் குறைவு எனக்கு...இந்த ரேங்கிங் வரத்தானே காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க மற்ற இரண்டு நண்பர்களும்...அடுத்தவரின் குறிப்பாக துட்டு போட்டு வாசகர்களை கட்டி வைத்து இருக்கும் பத்திரிக்கைகளின் பதிவுகளை அப்படியே கட் அண்ட் பேஸ்ட் போட்டவங்க எல்லாம் ஏன்யா வரமாட்டாங்க இப்படி முன்னாடி...கொடுமைய்யா!...சொந்தப்பதிவுகளை தற்காலிகமாத்தான் எழுத்திட்டு வராங்க அதுவும் மணம் மட்டும் ஓகே ன்னு சொல்லிடுசின்னா நாளைக்கே மீண்டும் முன்னாள் கதை தொடரும்...நண்பர்களாக இருந்தாலும் தவறுன்னா சொல்ல வேண்டியது என் கடமை...பின்ன ஏன் சொல்ல மாட்டாங்க "ஹிஹி"...இப்படி போட்டுத்தான் முன்னாடி வர முடியும் போல!...என்னத்த பண்றது..இவங்கல்லாம் நாட்டப்பத்தி கவலைப்படுறாங்க என்ன கொடும இது...! ௦- இது என் தனிப்பட்ட கருத்து....எனக்கு வயிற்தெரிச்சல்னு நெனச்சாலும் பரவாயில்ல ஹிஹி!

  ReplyDelete
 6. தரவுப் பட்டியலுக்கும், எம்மைப் பற்றிய சிறிய அறிமுகத்திற்கும் நன்றி!

  இப் பதிவிற்காக ஹன்சிகாவை அழைத்து வந்து அண்ணன் சிபி தலமையில் ஓர் குத்தாட்டம் போட வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்! நீங்க ரெடியா?

  ஹே....ஹே..

  ReplyDelete
 7. //@விக்கியுலகம்.எனக்கு வயிற்தெரிச்சல்னு நெனச்சாலும் பரவாயில்ல ஹிஹி!//

  ஹா ஹா...

  ReplyDelete
 8. அப்போ இப்படித்தான் முன்னேறனும்னு நீங்க நெனைக்கறீங்களா மாப்ள!

  ReplyDelete
 9. அசத்தும் பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..

  உங்களுக்கும் சேர்த்து..

  நன்றி
  சம்பத்குமார்

  ReplyDelete
 10. //..சொந்தப்பதிவுகளை தற்காலிகமாத்தான் எழுத்திட்டு வராங்க //

  ரொம்ப,ரொம்ப நன்றி மாப்ள..

  ReplyDelete
 11. //.நண்பர்களாக இருந்தாலும் தவறுன்னா சொல்ல வேண்டியது என் கடமை...// உங்கள் கடமை உணர்ச்சி மெய்சிளிக்க வைக்கிறது. தவறு செய்தா நண்பர்களை கேட்கக் கூடாதுன்னு யார் சொன்னது. மாபள நீ கம்பெடுத்தே அடிக்கலாம். அவ்வளவு உரிமை இருக்கிறது உமக்கு..

  ReplyDelete
 12. இந்த ரேங்கிங் வரத்தானே காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க மற்ற இரண்டு நண்பர்களும்..// சரி இந்த ரேங்க் வந்து நாங்க ரெண்டு பேரும் சென்னை அண்ணா நகரின் இரண்டு பிளாட் வாங்கிட்டோம் மாப்ள, நாங்க சந்தோசமா இருக்கோம், நண்பர்கள் சந்தோசமாக இருந்தால் நீங்களும் சந்தோசப்படுவீகள் என்றே நினைக்கிறேன். உண்மைதானே?

  ReplyDelete
 13. " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  இந்த ரேங்கிங் வரத்தானே காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்தாங்க மற்ற இரண்டு நண்பர்களும்..// சரி இந்த ரேங்க் வந்து நாங்க ரெண்டு பேரும் சென்னை அண்ணா நகரின் இரண்டு பிளாட் வாங்கிட்டோம் மாப்ள, நாங்க சந்தோசமா இருக்கோம், நண்பர்கள் சந்தோசமாக இருந்தால் நீங்களும் சந்தோசப்படுவீகள் என்றே நினைக்கிறேன். உண்மைதானே?"

  >>>>>>>>

  அப்புறம் எதுக்குய்யா இந்த பொழப்பு!

  ReplyDelete
 14. Vangappa ellarum......nama
  I.NA..
  Sabaikku poi niyayam
  keppom.......
  He...he....

  ReplyDelete
 15. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. Pathivargalukku Vaalthukkal. Ungalukkumthan.

  Voted in all aggregators.
  TM 8.

  ReplyDelete
 17. உண்மையில் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்....


  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

  இன்னும் நிறைய தமிழ் தளங்கள் இந்த பட்டியலில் இணைந்துக்கொள்ள பாடுபடுங்கள் என்று வரவேற்கிறேன்..


  அப்புறம் சசி.. கடைசியாக தங்களின் ரேங்க எவ்வளவு சொல்லியிருக்கலாமே...

  ReplyDelete
 18. விரைவில் நானும் இடம் பிடிக்க முயற்சி செய்வேன்

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 20. வணக்கமுங்க!அட இம்புட்டு இருக்கா?தகவல்களுக்கு நன்றிங்க!

  ReplyDelete
 21. சுவாரஸ்யமான பதிவு - புள்ளிவிவரங்களுடன்.

  ReplyDelete
 22. அன்பிற்குரிய வலையுலகச் சொந்தங்களுக்கு,

  எங்களின் வளர்சிக்கு வாசகர்களாகிய நீங்கள் தான் காரணம்! நேற்றே நான் இப் பின்னூட்டத்தினை எழுதியிருக்க வேண்டும், நேரமின்மையால் மறந்து விட்டேன்.

  எமது பதிவுகளைப் படித்து, ஆக்கமும் ஊக்கமும் நல்கும் சொந்தங்களுக்குத் தான் இந்தப் பெருமை சொந்தம்! எமக்கானது இந்த ட்ரேங் அல்ல! நாம் எழுதுகின்றோம்! எம் பதிவுகளை வரவேற்று ஆதரவு நல்குவது பல ஆயிரக்கணக்கான வாசக உள்ளங்களே! அவர்களுக்கு என் நன்றிகள்!

  ReplyDelete
 23. அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் சில நண்பர்கள் இவ்வரிசையில் இடம் பெற்று தமிழ் பதிவர்கள் தொடர்ந்து முன்னேறட்டும். அலெக்ஸா ரேங்கிங் பற்றி பதிவிட்ட தங்களுக்கு சிறப்பு கைகுலுக்கல். தொடர்க நண்பரே!!

  ReplyDelete
 24. முன்னனி பதிவர்களான கருண், ஜாக்கி சேகர், கேபிள் சங்கர் மூவரையும் பதிவர் சந்திப்பில் பார்த்ததில் ஆனந்தம் அடைகிறேன்.

  ReplyDelete
 25. அலேக்சா ரேங்கில் முன்னனியில் உள்ள பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press