Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இணையத்தில் இலவச Copyright புகைப் படங்களை மட்டும் தேட- Google Search

பதிவர்களாகிய நமக்கு படங்கள் மிகவும் அவசியமான ஒன்று. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற கருத்திற்கு இணங்க பதிவுகளில் வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது நகைச்சுவைக்காகவும் நாம் படங்களை தேடியந்திரங்கள் மூலம் கண்டறிந்து நம் பதிவுகளில் போடுகிறோம். ஆனால் அனைத்து படங்களையும் நாம் காப்பி செய்வது இணைய சட்டப்படி தவறாகும். சில படங்களை உரிமையாளர்கள் Copyright செய்து வைத்திருப்பார் அது போன்ற படங்களை நம்முடைய பதிவுகளில் போடுவது தவறாகும். உரிமையாளர் நினைத்தால் நம் மீது வழக்கு தொடரும் அளவுக்கு விதி முறை உள்ளது. 
நாங்க ஏதோ ஒரு மூலைல இருக்கோம் எங்க பதிவுல போடுறத எப்படிங்க கண்டுபிடிப்பாங்க என்று நீங்க சொன்னால் அதுக்கும் கூகுளில் வழி Search by Image உள்ளது. ஒரு படத்தை கொடுத்து தேடினால் அந்த படம் எங்கெங்கு உபயோக படுத்தப்படுகிறது சுலபமாக கண்டறிந்து கொள்ளலாம்.(எந்த பக்கம் போனாலும் கேட் போடறாங்களே ஹீ ஹீ)

இந்த பிரச்சினையை தவிர்க்க இணையத்தில் எப்படி இலவச படங்களை டவுன்லோட் செய்வதுன்னு பார்ப்போம். இணையத்தில் மிகப்பிரபலமான சர்ச் என்ஜினான கூகுள் இந்த வசதியை நமக்கு வழங்குகிறது. 

கூகுள்

கூகுளில் இலவச போட்டோக்களை தேட Google Image தளத்திற்கு சென்று அங்கு உள்ள Advanced Search என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் இதில் Usage rights என்ற இடத்தில் உள்ள Drop down  மெனுவில் க்ளிக் செய்து Labeled for commercial reuse with modification என்பதை தேர்வு செய்யவும்.
  • என்று கொடுத்து விட்டால் போதும் இப்பொழுது நீங்கள் கூகுல் இமேஜில் படங்களை தேடி பாருங்கள் உங்களுக்கு வரும் முடிவுகள் அனைத்தும் இலவச போட்டோக்களே வரும் அறிவிப்புடன் கீழே பாருங்கள்.
  • இந்த படங்களை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் Copy right பிரச்சினையே இல்லை. 
  • இந்த வழி நமக்கு இருக்க நாம் ஏன் மற்ற படங்களை போட்டு சிக்கலில் மாட்டி கொள்வானேன். 
இதையும் பாருங்கள் 
டுடே  லொள்ளு  


அடச்சீ என்னடா இது மூடவே மாட்டேங்குது யாராவது வர்றதுக்குள்ள ஒளிஞ்சிடலாம்னு பார்த்தா இப்படி பண்ணுதே 


நண்பர்களே நேரம் இருப்பின் இதில் உள்ள விளம்பரங்கில் ஒரு க்ளிக் செய்யுங்கப்பு...

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

20 comments :

  1. காபிரைட் படங்கள் மட்டும் தான் போடணுமா?

    ReplyDelete
  2. நடிகைகளின் காப்பிரைட் படங்கள் கிடைக்குமா? சசி...

    ReplyDelete
  3. டுடே லொள்ளு போட மறந்துட்டியா சசி...

    ReplyDelete
  4. >>தமிழ்வாசி - Prakash கூறியது...

    டுடே லொள்ளு போட மறந்துட்டியா சசி...

    adhu தான் லொள்ளு பண்ண நீங்க இருக்கீங்கல்ல?

    ReplyDelete
  5. தேவையான ஒரு தகவல்

    ReplyDelete
  6. எனக்கு உபவ்யோகமான பதிவுய்யா நன்றி

    ReplyDelete
  7. அணைத்து பதிவர்களுக்கும் பயனுள்ள தகவல். நன்றி

    ReplyDelete
  8. தமிழ்மணம் இணைச்சுட்டேன் நண்பா

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள தகவல் .
    பகிர்வுக்கு நன்றி சகோ .

    ReplyDelete
  10. மிகவும் பயனுள்ள தகவல்..

    ReplyDelete
  11. மாப்ள எங்கடா விளம்பரமே காணோம்..

    ReplyDelete
  12. ரொம்ப தேவையான தகவல்....மிக்க நன்றி பகிர்வுக்கு !!!

    ReplyDelete
  13. பதிவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டிய தகவல்...

    ReplyDelete
  14. அனைத்து பதிவர்களுக்கும் பயனுள்ள தகவல். நன்றி.

    ReplyDelete
  15. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  16. தெரியாத தகவல் நன்றி நண்பா

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press