கூகுள் பிளசில் போட்டோ ஆல்பம் அழிக்காதீர்கள் பதிவர்களுக்கு எச்சரிக்கை

சமூக தளமான கூகுல் பிளஸ் வெளிவந்த சில நாட்களிலேயே வளர்ச்சியில் ட்விட்டரையும், பேஸ்புக்கையும் பின்னுக்கு தள்ளி விட்டது. கூகுள் பிளசின் எளிமையான தோற்றமும், வசதிகளும் தான் இந்த வளர்ச்சியை அடைய வைத்தது. நம்ம பாட்ஷா படத்துல ரகுவரன் சொல்ற மாதிரி எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் ஒரு சின்ன தப்பு செய்வான் என்பது போல கூகுள் நிறுவனம் கூகுள் பிளசில் சில குறைகளை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த போட்டோ ஆல்பம் அழிக்கும் பொழுது ஏற்ப்படும் பிரச்சினை.
பொதுவாக நம்மில் பெரும்பாலானவர்கள் பதிவில் போட்டோவை சேர்க்க கூகுள் பிகாசா மூலம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதிலிருந்து நேரடியாக நம்முடைய பிளாக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். இது போல பகிர்வதால் போட்டோவை திரும்பவும் நம்முடைய போஸ்டில் அப்லோட் செய்ய வேண்டியதில்லை. பிளாக்கர் கொடுத்துள்ள From Picasa web albums என்ற வசதியின் மூலம் சேர்க்க எளிதாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த வசதியை உபயோகிக்கின்றனர்.


சரி இதனால் கூகுள் பிளசில் உருவாகும் பிரச்சினை என்னவென்றால் நாம் கூகுள் பிளசில் photo என்ற வசதி இருப்பது நமக்கு தெரிந்ததே. அந்த பிரிவில் Your Albums என்ற பகுதியில் நாம் கூகுள் பிளசில் உருவாக்கிய ஆல்பம்,பிக்காசாவில் உருவாக்கிய ஆல்பம் என அனைத்து ஆல்பங்களும் இருக்கும். இதில் நீங்கள் ஏதாவது ஆல்பம் தேவையில்லை என நினைத்து நீக்கினால் இது கூகுள் பிளசில் மட்டுமின்றி பிகாசா,பிளாக்கர் என கூகுளின் அனைத்து தயாரிப்புகளில் இருந்தும் நீங்கி விடும். பிளாக்கரில் பதிவுகளில் இந்த ஆல்பம்களில் இருந்து போட்டோக்கள் போட்டு இருந்தாலும் அனைத்தும் அழிக்கப்படும். ஆல்பம் அழிக்கும் போது கூகுளின் எச்சரிக்கை செய்தியை பாருங்கள்.


இந்த முறையில் டெலிட் செய்து விட்டால் அதை Undo செய்யும் வசதி இல்லை. முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும் திரும்பவும் கொண்டு வரவே முடியாது. உங்கள் பதிவுகளில் உள்ள போட்டோக்களும் அழிக்கப்பட்டு விடும்.

ஆகவே நீங்கள் ஒருவேளை போட்டோ அலாபம்களை அழிப்பதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக பரிசோதித்து அழித்து கொள்ளுங்கள்.

டுடே லொள்ளு


பொது இடத்துல தானே பிடிக்க கூடாது நான் என் பிளாக்ல தானே பிடிக்கிறேன் அப்புறம் என்ன இங்க வேடிக்கை கிளம்புங்க.........

//******//

Comments