Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஜிமெயிலை கேவலபடுத்திய மைக்ரோசாப்ட் [வீடியோ]

இணையத்தில் பெரிய நிறுவனங்களிடம் மிகப்பெரிய போர் நடந்து கொண்டுள்ளது. இணைய துறையில் ஜாம்பவானான கூகுளுக்கும் கணினி துறையில் ஜாம்பவானான மைக்ரோசாப்ட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக தொழில் போட்டி உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். கூகுள் சர்ச் எஞ்சினுக்கு போட்டியாக பிங் தேடியந்திரத்தையும், ஜிமெயிலுக்கு போட்டியாக ஹாட்மெயில் சேவையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இப்பொழுது கூகுள் வெளியிட்டிருக்கும் சமூக தளமான கூகுள்+ தளத்திற்கு எதிராக புதிய சமூக தளத்தை மைக்ரோசாப்ட் வெளியிடவுள்ளது. இவ்வாறு இவர்களின் தொழிற் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.




இந்த போட்டியே நாளடைவில் ஒருவருடைய தயாரிப்பை ஒருவர் குறை கூறும் அளவிற்கு இவர்களை இழுத்து சென்றுள்ளது. மைக்ரோசாப்ட் ஏதேனும் புதிய தயாரிப்பை வெளியிட்டால் அதை கூகுள் குறை கூறுவதும் கூகுள் ஏதேனும் தயாரிப்பை வெளியிட்டால் அதை மைக்ரோசாப்ட் குறைகூறுவதும் சில காலங்களாக நடந்து வருகிறது. 

சமீப காலமாக எந்த பிரச்சினையும் எழாமல் அவரவர் வேலையை ஒழுங்காக பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஜிமெயில் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது Save your friends from outdated email என்பதாகும். மற்ற ஈமயில் நிறுவனங்களில் உள்ள உங்கள் நண்பர்களை ஜிமெயில் கணக்கில் வரவைக்க உண்டாக்காப்பட்ட வசதியாகும். இதில் Outdated email என்று மற்ற ஈமெயில் நிறுவனங்களை சுட்டிகாட்டியது.

இதில் மைக்ரோசாப்டின் ஹாட்மெயிலும் அடங்கி இருப்பதால் மைக்ரோசாப்ட்டும் ஜிமெயிலை குறை கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு கோவத்தை வெளிபடுத்தியுள்ளது. அதில் ஜிமெயிலில் தனித்தன்மை இல்லை எனவும், ஜிமெயிலில் விளம்பரங்கள் வெளிவருவதை குறை கூறியும் இந்த வீடியோவை உருவாக்கி உள்ளது. 


இந்த வீடியோ உலகம் முழுவதும் பெரிதும் பரபரப்பாக பார்க்கபட்டு கொண்டிருக்கப்படுகிறது. ஜிமெயில் தரப்பில் இருந்து வாசகர்கள் தேவையென்றால் அந்த விளம்பரங்களை தடைசெய்து கொள்ளலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. மாறாக மைக்ரோசாப்ட் மீது எந்த குறையையும் இது வரை கூகுள் தெரிவிக்கவில்லை. (தேடி போய் ஆப்பில் உட்கார்ந்து கொள்வது இது தானோ)

அடுத்து கூகுளின் நடவடிக்கை என்னென்று பொறுத்திருந்து பார்ப்போம். எவன் அடிச்சிக்கிட்டா என்ன நம்ம ஜாலியா வேடிக்கை பார்ப்போம். வேடிக்கை பார்க்கிறதுல இருக்கிற சுகம் தமிழன தவிர வேர யாருக்கு தெரியும்.

sasikumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

14 comments :

  1. கூகுள் முன்னால் யாரும் நிற்க முடியாது என்கிற அளவு அதன் செயல்பாடு, வளர்ச்சி உள்ளது. போட்டியாளர்களுக்கு கூகுள் மீதான கோபம் இயற்கையானது தான்.

    ReplyDelete
  2. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

    ReplyDelete
  3. கூத்தாடிங்க ரெண்டு பட்டா ஊருக்கு கொண்டாட்டம் தானே .

    ReplyDelete
  4. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதாவது நமக்கு

    ReplyDelete
  5. It doesn't looks like a authenticated video from Microsoft... No competitors attack each other with brand names... especially when it come to Microsoft... no way... it's matter of their brand name... they don't make this kind of silly video...

    மன்னிக்கவும், இந்த கருத்தை தமிழில் எப்படி கூறுவதென்று தெரியாமல் ஆங்கிலத்தில் கூறி உள்ளேன்...

    ReplyDelete
  6. வேடிக்கை பார்க்கிறதுல இருக்கிற சுகம் தமிழன தவிர வேர யாருக்கு தெரியும்?

    ReplyDelete
  7. //ஜிமெயிலுக்கு போட்டியாக ஹாட்மெயில் சேவையும் மைக்ரோசாப்ட் வெளியிட்டது. //
    இது தவறு. ஹாட்மெயில் 1997 வாக்கிலேயே வந்து விட்டது. மைக்ரோசாப்ட் அதை வாங்கியது 2000-இல் என்று நினைக்கிறேன்.கூகிளின் ஜி மெயில் 2004 வாக்கில் தான் வந்தது. எப்படி பார்த்தாலும், கூகிளின் இன்னோவேஷன் முன் மைக்ரோசாப்ட் கொஞ்சம் மட்டு தான்!

    ReplyDelete
  8. GMail Man...... .உண்மையை சொல்றாங்க.... ha,ha,ha,ha....

    ReplyDelete
  9. /////////// வேடிக்கை பார்க்கிறதுல இருக்கிற சுகம் தமிழன தவிர வேர யாருக்கு தெரியும்./////////

    இந்த வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  10. சண்டை போடாதீங்க ஏட்டைய ! ! !

    ReplyDelete
  11. மச்சி, புதிய தகவலை வீடியோவோடு இணைத்துப் பகிர்ந்திருக்கிறீங்க.

    யார் அடிச்சாலும் என்ன, நாம வேடிக்கை பார்ப்போம்.. எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு.

    ReplyDelete
  12. Gmail பரவாயில்லை... Save from Outdated Email சேவையை நம் விருப்பத்திற்கு விட்டிருக்கிறார்கள்.. இதுவே மைக்ரோசொப்ட் என்றால் நமது ஹாட்மெயில் மெயில்களுக்கு அடியில் நம்மைக் கேட்காமலே சேர்த்து அனுப்பி உயிரை வாங்கியிருப்பார்கள்..

    என்ன இருந்தாலும் மைக்ராசொப்ட்- இன் targeted ad அநாகரீகமான செயல். ஒரு போட்டி நிறுவனத்தை பொதுவில் இவ்வாறு சுட்டிக்காட்டித்தான் தனது ஆபீஸ் 365 -க்கு ஆட்சேர்க்க வேண்டிய பரிதாபகமான நிலை... அந்த வீடியோவில் சொன்னபடி மெயில்கலைப் படிக்கும் செயலை இன்று எல்லா நிறுவனங்களும் (மைக்ராசொப்ட் உட்பட) பல்வேறு காரணங்களுக்காக செய்கின்றன.. இந்த வீடியோவைப்பார்த்து தற்கால இணையவாசிகள் தங்கள் பக்கம் சாய்வார்கள் என நம்புவது அவர்களது மடத்தனம்..

    இதிலிருந்து இந்த வீடியோவைப்பார்த்து ஏமாறும் அளவுக்கு மைக்ரோசொப்ட் எங்களை வடிகட்டின முட்டாள்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறது.. பாவம்..

    எப்படியோ யார் சண்டை போட்டாலும் நமக்கு லாபம் தான்... மைக்ராசொப்ட் போட்டிக்கு இப்படி கேனத்தனமா ஏதாவது செய்யும்.. கூகுளோ நமக்கு உதவியாக புதிய வசதிகளை தரும்... பொறுத்திருந்து பார்ப்போம்... கூகுள் வாழ்க..

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press