Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

இஸ்லாம் நண்பர்களுக்கு கூகுளின் பரிசு

நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள். 


முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த ரமலான் மாதம் மிகவும் புனிதமான நாட்களாகும். இந்த நாட்களில் அவர்கள் இறைவனுக்காக கடும் விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவர்.  இஸ்லாம் நண்பர்கள் புனித தளமான மெக்காவில் உள்ள அல்-மஜீத்-அல்-ஹரம் மசூதியில் நடைபெறும் தொழுகைகளை நேரடியாக உலகம் முழுவதும் பார்க்கும் வசதியை யூடியுப் மூலம் கூகுள் வழங்கி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு கூகுள் கொடுத்துள்ள ரமலான் பரிசாகும். 

உலகிலேயே மிகப்பெரிய மசூதியான இந்த இடத்தில் இருந்து நேரடி லைவில் பார்ப்பது அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமே.

இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

33 comments :

 1. முஸ்லீம்களுக்கு தேவையான பகிர்வு மாப்ளே

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள பகிர்வு... இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.... நன்றி... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல விஷயம் ,நன்றி

  ReplyDelete
 4. சவூதி அரேபிய தேசிய தொலைக்காட்சி செய்மதித் தொலைக்காட்சியூடு, இதைச் சில வருடங்களாக ஒளிபரப்புகிறது. நான் இங்கு இதை சிலவருடங்களாகப் பார்க்கிறேன்.
  இந்த மனித சங்கமம், பிரமிக்க வைப்பதே!

  ReplyDelete
 5. நானும் குட் ஒன் சொல்லிக்கிறேன்

  ReplyDelete
 6. இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்///

  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 7. இஸ்லாம் நண்பர்களுக்கு ரமலான் தின வாழ்த்துக்கள்///

  மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 8. மிக்க நன்றி அண்ணா

  ReplyDelete
 9. நமது சகோதர சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்... இந்த பரிசை நல்கிய கூகுலுக்கு நன்றி... இந்த பகிர்வை பகிர்ந்த உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இதைப் பகிர்ந்ததற்கு நன்றி சகோ!

  ReplyDelete
 11. நன்றி நண்பரே.

  ReplyDelete
 12. சலாம் சகோ.சசி.
  பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 13. தொழுகை உங்களுக்கே . தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

  ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

  கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

  ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

  அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

  இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

  ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

  தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

  ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

  உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

  இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

  உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

  தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

  நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

  உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

  பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

  "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

  இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

  இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

  தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

  நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

  தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.


  தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.

  வாஞ்சையுடன் வாஞ்சூர்.

  .

  ReplyDelete
 14. பயனுள்ள பதிவு.நன்றி.

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு , நன்றி சசி

  ReplyDelete
 17. நோன்புக் காலத்திற்கேற்ற காத்திரமான அறிமுகப் பதிவு மச்சி.

  ReplyDelete
 18. பகிர்வுக்கு
  ரொம்ப நன்றி நண்பரே
  இந்த பகிர்வு கண்டு மகிழ்கிறேன்

  ReplyDelete
 19. பயனுள்ள பகிர்வு .

  நன்றி சசி.

  ReplyDelete
 20. நன்றி நண்பரே

  ReplyDelete
 21. ரொம்ப நன்றி நண்பரே

  ReplyDelete
 22. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சகோதரரே

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press