Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண

நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.
  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.  
  • அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும். 
  • அவ்வளவு தான் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும்.
  • இப்படி உங்களுக்கு கணியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும். 
  • உங்கள் கணினி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணினியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
  • அதற்க்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணினியோடு இணைந்துள்ள மற்ற கணினியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.
  • HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணினிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம். 
  • உங்களுடைய நண்பர்களின் கணினிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். 
  • இந்த அணைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Licence Crawler1.6.0.182

டுடே லொள்ளு 


எவ்ளோ நேரம் தொங்கினாலும் இதுக்கு மேல வளர முடியலையே 

/************/

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

23 comments :

  1. காம்ப்ளான் வாங்கி குடுங்க நண்பா!

    ReplyDelete
  2. உபயோகமான பதிவு. பகிர்வுக்கு தாங்க்ஸ் மாப்ள

    ReplyDelete
  3. மிக்க நன்றி...

    இன்றைய பதிவும் பயனுடையதுதான்...

    ReplyDelete
  4. மாப்ள இத வச்சி பல விஷயங்கள் பன்னலாம்போல ஹிஹி நன்றிய்யா!

    ReplyDelete
  5. @விக்கியுலகம்

    மாப்ள இன்னும் பல விஷயங்களும் பண்ணலாம் கொஞ்சம் யோசித்தால். சட்டப்படி தவறு என்பதால் அதை தெரிவிக்கவில்லை ஹீ ஹீ

    ReplyDelete
  6. டுடே லொள்ளூல எங்க மாப்ளை கருணை நக்கல் அடிச்சது தப்புய்யா. சசி ஹி ஹி

    ReplyDelete
  7. குரங்கு படம் அட்டகாசம்

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல்.
    பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  9. சசி.. சட்டத்துக்கேல்லாம் பயப்படுதுப்பா..

    ReplyDelete
  10. பயனுள்ள பதிவு,
    வழக்கம் போல உங்கள் பாணி கலக்கல் டுடே லொள்ளு...

    ReplyDelete
  11. பகிர்வுக்கு மிக்க நன்றி சசி!

    ReplyDelete
  12. பயனுள்ள பதிவு,பகிர்வுக்கு நன்றி சசி!!

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல். பயன்படுத்தி பார்க்கிறேன்..
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. வணக்கம் தங்களின் பதிவுகளை தவறாமல் படிப்பவன் .இதை பயன் படுத்தி பார்த்ததில் .என்னை ஆச்சரிய பட வைத்து விட்டது .மறந்து போன எல்லா இலக்கங்களையும் எடுத்து கொடுத்து விட்டது .நன்றி .

    ReplyDelete
  15. மச்சி, இப்படியெல்லாம் புது விதமான செக்கிங் இருக்கா. அறிமுகத்திற்கும், பகிர்விற்கும் நன்றி மச்சி.

    ReplyDelete
  16. தலைவா இதில அட்மின் பாஸ் வோர்ட் பார்த்து கொள்ளலாம்மா ??

    ReplyDelete
  17. உபயோகமான தகவல் நன்றி நண்பரே...

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல் நன்றி நண்பரே...

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press