Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சில மற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.

வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.


snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.


Snapshot பார்மட் மாற்ற :
டீபால்டாக png பார்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்க ப்படும். இதனை JPG பார்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P  கொடுத்து  வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும்.  அதில் Snap shot பகுதியில் போட்டோ பார்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள். 


ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:
ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டங்கள் தெரியும் இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம். 

மேலே உள்ள முறைகளை பயன்படுத்தி VLC பிளேயர் மூலம் சுலபமாக வீடியோவில் இருந்து Snapshot எடுத்து கொள்ளலாம். 

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கீழே ஒடுள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும் இந்த தகவல் பலருக்கு சென்றடைய ஏதுவாக இருக்கும்.
Tech Shortly

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

15 comments :

  1. இப்படியெல்லாம் வழி இருக்கா...நன்றிய்யா மாப்ள!

    ReplyDelete
  2. எத்தனை வசதிகளை தன்னுள் அடக்கியிருக்கிறது? நானும் இது தெரியாமல் இருந்துள்ளேன்... நன்றி!

    ReplyDelete
  3. நல்ல தகவல் அறிய தந்தமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  4. பயன்தரும் தகவல், நன்றி!

    < href="http://nizampakkam.blogspot.com/2011/09/16.html">

    ReplyDelete
  5. அப்பாடி...எனக்கு ஏற்கெனவே தெரிந்த விவரம் முதன்முறையாக...ஆனால் என் பிரச்னை வேறு. கொஞ்ச நாள் முன்பு வரை வி எல் சி ஒழுங்காக வேளை செய்து கொண்டிருந்தது. இப்போதெலாம் எத்தனை முறை அன் இன்ஸ்டால் செய்து மறுபடி நிறுவினாலும் படங்கள் பார்க்கும்போது விட்டு விட்டு ஓடுவதால் என்னால் அதை உபயோகிக்க முடியவில்லை.

    ReplyDelete
  6. பயன்தரும் தகவல்... நன்றி நண்பரே...

    ReplyDelete
  7. u can press ctrl+s to take a snapshot. to record a particular part of video, press ctrl+r. once u r done wit recording, press ctrl+r again

    ReplyDelete
  8. சூப்பர் நண்பா... பகிருவுக்கு நன்றி

    ReplyDelete
  9. நல்ல பதிவுங்கோ! அவசியமான தகவல்!

    ReplyDelete
  10. பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி மாப்ளே

    ReplyDelete
  12. வணக்கம் பாஸ்,

    போட்டோக்களை இலகுவாக வெட்டி எடுப்பதற்கேற்ற நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  13. சகோதரா வணக்கம்...

    உங்க பதிவை எப்படி எடிட் பண்ணி பாவிக்கிறாங்கண்ணு கீழுள்ள லிங்கில போய் பாருங்கள் லிங் கொஞ்சம் பெரிசு காரணம் மெயிலுக்குள்ளால் வந்த லிங்..

    http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=14007&utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+ParisTamil-LatestNews+%28ParisTamil++-+Latest+Tamil+News%29

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press