இன்று ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை காண்போம்.இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம் என்ற ஒரு மந்திரச்சொல் தான். இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை. இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் கேபில்களாலும், செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளதால் இந்த கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணையம் கேபிள்களை கொண்டே இணைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் கேபிள்கள் எப்படி கடலுக்கு அடியில் மற்ற நாடுகளுக்கு இணைக்க படுகிறது என்ற வரைப்படத்தை காணலாம்.
இந்த வரைப்படத்தை சுலபமாக காண நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது. இந்த தளத்திற்கு சென்றால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இணைய இணைப்பிற்கான வரைபடம் காணப்படுகிறது.
இதில் உங்களுக்கு தேவையான நாடுகளில் கிளிக் செய்தால் பெரியதாகி காட்டும். மற்றும் வலது பக்கத்தில் ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும், இணைய இணைப்பு நிறுவனங்களும் இருக்கும் அவைகளில் கிளிக் செய்து மேலும் சில தகவல்களை பெறலாம்.
இந்த தளத்திற்கு செல்ல- Under Sea Cable
கூகுளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்:
நேற்று வெற்றிகரமான தனது 13வது பிறந்த நாளை கொண்டாடிய கூகுள் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். (நேற்று இணையம் பக்கம் வர முடியாததால் தாமதமான வாழ்த்துக்கள்.)

13வது பிறந்த நாள் என்பதால் 13 மெழுகுவத்தியை ஏற்றி வைத்திருப்பதை பாருங்கள்.(எதிலும் ஒரு கணக்கு வேணும்ல)
இன்ட்லியின் புதிய மாற்றம்:
இரண்டு நாட்களாக பராமரிப்பு பணிக்காக முடக்கப்பட்டு இருந்த இன்ட்லி தளம். தற்பொழுது திரும்பவும் சேவைக்கு வந்துள்ளது. இதில் ஓட்டு பட்டையில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது. இனி நீங்கள் இன்ட்லி தளத்தில் ஓட்டு பட்டை இருக்காது ஓட்டும் போட முடியாது. லிங்கில் கிளிக் செய்து பிளாக்கிற்கு வந்தால் தான் ஓட்டு போட முடியும். மற்றும் உங்கள் பதிவுக்கு யார் யார் ஓட்டு போட்டு உள்ளார்கள் என அறியவும் இனி முடியாது. இதனால் மொய்க்கு மொய் முறை இனி வேலைக்கு ஆகாது. ஒரு குழுவாக சேர்ந்து ஓட்டு போட்டுக்கொள்ளும் செயலை தடுக்கவே இன்ட்லி இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் தரமான பதிவுகள் வெளிவர வாய்ப்புள்ளது. இந்த மாற்றத்தை செய்த இன்டலி நிர்வாகத்திற்கு பதிவர்கள் சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஓட்டு பட்டை இருந்த இடத்தில் பதிவரின் போட்டோ இருப்பதை காண்பீர்கள். இன்ட்லியில் ஆங்கிலம்,ஹிந்தி என்ற பிற மொழிகளில் திரட்டிகள் இருந்தாலும். தமிழுக்கு மட்டும் தான் இந்த ஓட்டு பட்டை வசதியை நீக்கி உள்ளது. இது நமக்கு பெருமையா சிறுமையா #டவுட்டு
இந்த பதிவு பலரை சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும்.
Comments