12/11/2011

வொய் திஸ் கொலைவெறி டி பாடல் செய்ய போகும் அடுத்த சாதனை

சமீபத்தில் வெளியான கொலைவெறி டி என்ற பாடல் யூடியூபில் சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது. இது வரை மட்டுமே பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டி விட்டது.  யூடியுப் தளமும் தங்க மெடல் கொடுத்து கவுரவித்தது. ஒரு தமிழ்(தங்லிஷ்) பாடல் யூடியூபில் இந்த அளவு பார்க்க பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்த பாடலுக்கு இவ்வளவு வரவேற்ப்பு இருப்பினும் சோனி நிறுவனம் வெளியிட்டதால் தாள் தான் இந்த வரவேற்ப்பு என்ற கருத்தும் இருக்கிறது. எப்படியோ இன்றைய இளைஞர்களின் தேசிய கீதமாக இந்த பாடல் மாறி இருக்கிறது. இவ்வளவு மகுடங்களை பெற்ற இந்த பாடல் அடுத்ததாக ஒரு சாதனையை செய்ய இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனம் 2011 ஆம் ஆண்டின் ஒரு வருடத்திற்கான(Airtel mobitude 2011) உபயோகத்தினை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் பாடல்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாம். அதில் வெளியிட்ட 18 நாட்களில் கொலைவெறி டி பாடலை 2,10,000 பேர் ஏர்டெல் மொபைல்களில் இருந்து டவுன்லோட் செய்துள்ளனர். சமீபத்தில் ரா-ஒன் படத்தில் வெளியான Chammak challo என்ற பாடல் தான் 2011 இல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட வீடியோ பட்டியலில் முதல் இடத்தில உள்ளது.

ஆனால் வெளியான 18 நாட்களில் இவ்வளவு பேர் டவுன்லோட் செய்திருப்பதாலும், இந்த படம் ரிலீஸ் ஆகிவிட்டால் இதன் எண்ணிக்கை பல மடங்கு கூடும் என்ற நம்பிக்கையிலும் கொலைவெறி டி பாடல் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள் பட்டியலில் சுலபமாக முதல் இடத்தை பிடித்துவிடும். மற்றும் இதர அதிகம் டவுன்லோட் செய்யப்பட்டவை.


புகைப்படங்கள் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகைகளின் பட்டியல்:

 1. காத்ரீனா கைப்
 2. தீபிகா படுகோனே
 3. கரீனா கபூர்
 4. ஜாக்லீன் பெர்னாண்டஸ்
 5. பிரியங்கா சோப்ரா
புகைப்படங்கள் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட நடிகர்களின் பட்டியல்:
 1. ஷாருக் கான்
 2. சல்மான் கான்
 3. ஷாகித் கபூர்
 4. இம்ரான் கான்
 5. ஜான் ஆப்ரகாம்
அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட பாடல் வீடியோக்கள் பட்டியல்:
 1. சமாக் சல்லோ
 2. திங்கா சிக்கா
 3. செனோரீட்டா மகர் பிர் பி
 4. சோர்க்கா சக்தே ஹயே
 5. டேரி  மெரி மெரி டேரி 

 கொலைவெறி டி பாடலை கீழே உள்ள பாடலை கண்டு களிக்கலாம்.


இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர கீழே உள்ள சமூக தளங்களை உபயோகித்து கொள்ளவும்.

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home