Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே]

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்!

- சண்.சரவணக்குமார்

வந்தேமாதரத்தின் கண்டனம்:
தின்பது இங்கே படிப்பது இங்கே சம்பாதிப்பதும் இங்கே தமிழ்நாட்டுல இருந்து எதுவும் வரவில்லை என்றால் நீங்கள் தேயிலையை தான் பறிச்சு திங்க வேண்டும் ஞாபகம் இருக்கட்டும். இந்த நிலைமையில் இருக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா? ஏண்டா #$ர்#%$ மாதிரி பொம்பளைங்கள அடிக்கிற உன் வீரத்தை ஆம்பிளைகளுக்கு காட்டு. உண்மையிலேயே உனக்கு ரோசம் இருந்தால் நீ சாப்பாட்டுல உப்பு போட்டு சாப்பிட்டால் தமிழகத்தில் இருந்து வரும்(மின்சாரம் உட்பட) எதுவும் எங்களுக்கு வேணாம்னு சொல்லுங்கடா அப்ப ஒத்துக்குறேன். அதை விட்டுட்டு கூலி வேலைக்கு வரும் என் தாய்கள்,சகோதரிகள் மீது காட்டுகிறாயா? தமிழகத்தில் யாரும் மலையாள பெண்கள் இல்லை என நினைத்து கொண்டு இருக்கிறீர்களா இங்கும் ஆயிரக்கணக்கில் மலையாள சகோதரிகள் இருக்கின்றனர். தமிழன் எப்பொழுதும் தன் வீரத்தை பொம்பளைங்க மீது காட்ட மாட்டான். மாட்டுக்கறி திங்கும் உங்களுக்கு எங்க இதெல்லாம் தெரிய போகுது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை மறக்க வேண்டாம். 
(சில ஈனச் செயலில் இறங்கியுள்ள நபர்களுக்கு மட்டுமே இக்கண்டனம்)


இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.


பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள். 

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

34 comments :

 1. பயனுள்ள செயல்.
  மனு அனுப்பியாகிவிட்டது.
  நண்பர்களுக்கும் பகிர்ந்தாகிவிட்டது.
  தகவலுக்கும்,பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 2. பதிந்துவிட்டேன் நண்பரே..

  மானங்கெட்டவர்களுக்கு இணையத்தின் வழி தக்க பாடம் புகட்டுவோம்..

  வேலைக்குச் சென்ற பெண்களை சீண்டிப்பார்த்த நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்

  ReplyDelete
 3. பதிவினை வாசிக்கும் அன்பர்களே / நண்பர்களே மறக்காமல் உங்களது ஆதரவை சமர்பிக்க வேண்டுகிறேன்

  ஒன்றிணைவோம் வாருங்கள் நம் மக்களுக்காக...

  ReplyDelete
 4. மனு அனுப்பியாகிவிட்டது

  ReplyDelete
 5. ஊடகத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறீர்கள். அத்துமீறலை வன்மையாக கண்டிப்போம்! மனித உரிமை மீறலை கண்டித்து நானும் தங்களது புகார் மனுவிற்கு எனது ஆதரவை பதிவு செய்துவிட்டேன் நண்பரே! தங்களது இந்த செயலுக்கு பாராட்டுக்களும், நன்றிகளும்.

  ReplyDelete
 6. பட்டிகளின் செயல் பதற வைக்கிறது!

  ReplyDelete
 7. பதித்து விட்டேன் நண்பரே! நன்றி!

  ReplyDelete
 8. இந்த செயலை ,அல்ல காட்டுமிராண்டித்தனத்தை செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!
  நிச்சயம் நமது கண்டனத்தை பதிவு செய்வோம்.

  தலைப்பில் கோபம் ரொம்பவே கொப்பளித்திருக்கிறது.என்ன செய்வது சில புல்லுருவிகள் செய்யும் செயல்களுக்கு அனைவரும் பாதிப்புக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகின்றனர்.

  ReplyDelete
 9. தமிழன் என்றால் எவன் வேண்டுமானாலும் தாக்கலாம் என்றாகிவிட்டது

  ReplyDelete
 10. வணக்கம்!மனுவில் கையெழுத்திட்டு அனுப்பி விட்டேன்.ஒன்றுபடுவோம்,எங்கள் பலத்தை நிரூபிப்போம்!

  ReplyDelete
 11. நானும் என்னுடைய கண்டனத்தைக் கடுமையுடன் பதிவு செய்கிறேன். நண்பா தலைப்பு நமது பண்பாட்டைக் குறைப்பதாக உள்ளது. ஒரு சிலர் செய்வதற்காக மொத்தமாக ஏசுவது தவறானது. அவர்களையும் இனவெறி பீதியைக் கிளப்பித்தான் அரசியல்வாதிகள் பிழைக்கிறார்கள். மொத்தமாக மலையாள நாய்கள் என்று சொல்வது அந்தப் பன்னாடைகளுக்கும் நமக்கும் வித்தயாசமில்லை என்றாக்கிவிடும்.

  ReplyDelete
 12. vedhanai kalandha padhivu adhuenna edhunadandhalum thamizhargal otrumaillai kaaranam inge thamizhan roobaththil neraya inangal iruppadhaal nandri

  ReplyDelete
 13. தகவலுக்கு நன்றி மாப்ளே!

  ReplyDelete
 14. மாப்ள அனுப்பிட்டேன்!...இருந்தாலும் இது குறித்து என்னோட கருத்து என்னன்னா...முதல்ல அவனுங்கள சோத்துக்கு அலைய விட்டாதான் சரிப்படும்...தக்காளி எவன் எவன் துள்ரானோ அங்கேயே சுடனும்!

  ReplyDelete
 15. பெட்டிஷன் அனுப்பி விட்டேன் சசி.

  ReplyDelete
 16. கடந்த வாரம் கூடலூரில் ஒரு இளைஞர் சுயமாக தீக்குளித்தார். ஆனால் தமிழக ஐயப்பசாமி மீது தீ வைத்து விட்டார்கள் என்ற புரலி தமிழகம் முழுவதம் பரவியது. தமிழக போலீசாரின் கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து அந்த விடயத்தை ஊடகங்கள் கைவிட்டன. அடுத்து எந்த பிரச்சனையை கையில் எடுத்தால் தமிழக மக்கள் கொந்தளிப்பார்கள் என்பது ஊடகங்களுக்கு தெரியாமல் இல்லை. அதை செய்து சாதித்துவிட்டார்கள்.

  ஒரு வருடத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒரு இளைஞன் திருச்சூர் ரயிலில் ஒரு கல்லூரி பெண்னை கழ்பழித்து கொலை செய்த செய்தியை படித்திருப்பீர்கள். அப்போது கேரள மக்கள் யாரும் அதை தமிழர்கள் செய்ததாக பார்க்கவில்லை. கேரளாவில் உள்ள தமிழர்களையும் தாக்கவில்லை. தனிப்பட்ட ஒரு கொடூரன் செய்ததாக தான் பார்த்தார்கள். 6 மாதங்களில் வழக்கு முடிக்கப்பட்டு அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  இதே போல குமுளியில் தமிழ் பெண்களை மானபாங்கப்படுத்தியதாக சொல்லும் கயவர்களை அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். ஆனால் தமிழர்&மலையாளிகள் கலவரத்தைதூண்டி வேடிக்கை பார்க்கின்றன ஊடகங்கள்.

  தமிழக போராட்டக்குழுவும், கேரள போராட்டக்குழுவும் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள். அதை வெளியிட்டு பிரச்சனை தீர்க்க ஊடகங்கள் முன்வரவில்லை. இதை கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் இன்று மலையாளி தமிழர் பிரச்சனைக்காக வக்காலத்து வாங்குகின்றனர்.

  சிலரின் சுயநலத்திற்காக பல அப்பாவிகளின் வாழ்க்கையில் விளையாடும் ஊடகங்கள் நாசமாக போகட்டும் என்று சபிப்பதை தவிர வேறு என்ன சொல்ல?

  ReplyDelete
 17. இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!
  நிச்சயம் நமது கண்டனத்தை பதிவு செய்வோம்.


  உண்மைவிரும்பி,
  மும்பை.

  ReplyDelete
 18. மனு அனுப்பியாகிவிட்டது

  ReplyDelete
 19. வணக்கம் மிகவும் சிறப்பான தன்மானமுள்ள ஒருதமிழனாக மிளிர்ந்து இருக்கிறீர்கள் உண்மையில் இது போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியது இதுபோல மற்றவர்களின் குருட்டு கண்களுக்கும் செவிட்டு காதுகளுக்கு சென்றடைய செய்த விதம் சிறப்பு பாராட்டுகள் ....

  ReplyDelete
 20. இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!

  ReplyDelete
 21. அண்ணா ,நாம யாரு என்ன ஒண்ணுமே புரியலே .(மலையாளி,மலேசியாகாரன் ,சிங்களன் ,கன்னடன்) ,எல்லா மயிரான்ட்டியும் அடிக்கிறான்.
  நம்மை ஆள்வோருக்கும் மத்திய அரசுக்கும் இன உணர்வு இல்லை.
  தேசிய ஒருமைப்பாடு சுண்டைக்காய் என்று ஏதாவது சொல்லி நம்மை சும்மா காயடுச்சு வைப்பான் .தமிழனை அடிச்சா கேரளாவிலே கேஸ் இல்லை.ஆனா மலையாளியை அடிச்சா நம்ம நாட்டிலே கைது பண்றான் .கருணாவை குற்றம் கூறி இருக்கை பிடித்த அம்மாவும் டில்லிக்கு கடிதம் எழுதுகிற சீன் போடுது .
  மாற வேண்டியது தலைமைகள் மட்டுமல்ல . .நடிகர்களும் மக்களும்தான் .
  இளைய தளபதி விஜய் சொல்லும் ஜோய் ஆலுக்காஸ் கடைஇல் நகை வாங்கி ,சீயா ன் விக்ரம் கூறும் மனப்புரத்தில் அடகு வைத்து பிரபு சொல்லும் கல்யான் கடையில் மீண்டும் நகை எடுத்து நாசமாப்போகனும் .தமிழனின் விதி .

  ReplyDelete
 22. சகோ தமிழ் மலர் சொல்வது முற்றிலும் சரியே ...
  சில மலையாளிகள் செய்யும் தவறு , ஒட்டுமொத்த
  மலையாளிகளுக்கும் கெட்ட பெயர் வருது .....
  அரபு நாடுகளில் இருந்து வரும் பணத்தாலும் ,
  தமிழகத்திலிருந்து வரும் உணவுப் பொருட்களாலும் ,
  தான் அவர்கள் உயீர் வாழ்கிறார்கள் ......
  என் மனுவை அனுப்பிவிட்டேன்
  சகோ சசி அவர்களே சபாஸ்

  ReplyDelete
 23. இந்தியாவுக்கும் , பாகிஸ்தானுக்கும் இருந்த
  சிந்து நதி பிரச்சனை ,
  இந்தியாவுக்கும், பங்களாதேஷிக்கும் இருந்த
  யமுனா நதி பிரச்சனை,
  வெட்டு குத்து இல்லாமல், சுமுகமாக முடிந்து விட்டது ஆனால்
  இதோ நம் பக்கத்தில் இருக்கிற கேரளா + கர்நாடகா நதி நீர் பிரச்சனை
  காலங்காலமாக அப்படியே இருக்கிறது.... இதுவரை தீர்வுக்கு வழி பிறக்கவில்லை (??!!)
  இதுதான் தேசிய ஒருமைப்பாடா ???????!!!!!!!!!
  நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா ??!! சந்தேகமாக இருக்கிறது

  ReplyDelete
 24. மானத்தமிழனாய்,காரமான பதிவுக்கு நன்றி.மனு அனுப்பிவிட்டேன் நண்பரே.

  ReplyDelete
 25. முல்லைபெரியாறு புதிய அணை வேண்டாம் கேரள அறிவிப்பு

  http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html?

  ReplyDelete
 26. இந்திய ஒருமைப்பாடு என்பதை இந்தியாவில் உள்ள தமிழர்கள் மட்டும் தான் கடைபிடிக்கவேண்டும் என விரும்புகின்றது மத்திய அரசும் காங்கிரஸ்/கம்யூனிஸ்டு/பாஜக போன்ற தேசிய கட்சிகளும். அப்பாவிகள் மீது வன்முறை நிகழ்த்துவதை எந்த ஒரு மாநில அரசும் துணைபோகக் கூடாது. ஆனால் கேராளா காங்கிரஸ் அரசோ மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக இடைத்தேரதலை மனதில் கொண்டு திட்டமிட்டு தூண்டுகின்றன. பழுத்த அரசியல்வாதியான கம்யூனிஸ்டு தலைவர் அச்சுதானந்தமும் கம்யூனிஸ்டுவின் உண்மையான மக்கள் நல கொள்கையினை மறந்து இனவெறியுடன் செயல்படுவது வேதனையான ஆரோக்கியமற்ற அரசியல். இங்குள்ள இந்திய தேசியப் போலிகளும் வாளாவிருப்பது அழகல்ல. நம்மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் நம் மாநிலத்திற்கு மட்டுமே என்றிருந்தால் இப்போதும் நாம் மின்வெட்டை சந்திக்கவேண்டிய அவசியமே இருந்திருக்காது.

  இணையம் வாயிலாக போராட வடிவமைத்து ஒருங்கிணைத்த உங்களின் செயல் பாராட்டிற்குரியது.

  ReplyDelete
 27. அன்பை வேகமாகவும்
  கோபத்தை நிதானமாகவும் காட்ட வேண்டும்.. சுயநலவாதிகளின் பிடியில் சிக்கிவிட வேண்டாம்.. தர்மமே வெல்லும்..

  ReplyDelete
 28. நன்றி நண்பரே..
  வாக்களித்து விட்டேன்!!

  அத்துடன், என் நண்பர்களிடமும் பரப்பும் முயற்சியாக என் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்!!

  http://aalunga.blogspot.com/2011/12/blog-post_15.html

  ReplyDelete
 29. நானும் மனு அனுப்பி விட்டேன் நண்பரே!!

  மேலும், இதனை என் நண்பர்களிடம் பரப்புவதற்காக:
  http://aalunga.blogspot.com/2011/12/blog-post_15.html

  ReplyDelete
 30. நயவஞ்சகர்கள்.

  ReplyDelete
 31. நண்பரே..

  மானங்கெட்டவர்களுக்கு இணையத்தின் வழி தக்க பாடம் புகட்டுவோம்..

  வேலைக்குச் சென்ற பெண்களை சீண்டிப்பார்த்த நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்

  ReplyDelete
 32. நண்பரே..

  மானங்கெட்டவர்களுக்கு இணையத்தின் வழி தக்க பாடம் புகட்டுவோம்..

  வேலைக்குச் சென்ற பெண்களை சீண்டிப்பார்த்த நாய்களை நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press