Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

ஐந்து பயனுள்ள இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று மூன்று பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.


CCleaner v3.13.1600
கணினிகளில் உள்ள தேவையற்ற பைல்களை சரியாக கண்டறிந்து அழித்து கணினியை சுத்தமாக வைத்து கொள்ள உதவும் CCLEANER மென்பொருள் பெரும்பாலானவர்கள் உபயோகப்படுத்தும் மென்பொருளாகும். இந்த மென்பொருள் நிறுவனத்தினர் அடிக்கடி மென்பொருளை மேம்படுத்தி புதிய வெர்சன்களை வெளியிடுகின்றனர். அந்த வரிசையில் தற்பொழுது புதிய பதிப்பான CCLEANER V3.13.1600 என்ற பதிப்பை வெளிட்டு உள்ளனர்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - CCLEANER v3.13.1600

Google Chrome 16.0
இணைய உலவிகளில் வெளியிட்ட சில ஆண்டுகளிலேயே மிகப்பரவலாக உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு இணைய உலாவியாகும். இந்த உலவியின் எளிமையான தோற்றமும் வேகமான செயல் திறனாலும் அனைவரும் இந்த உலவியை விரும்பி பயன்படுத்துகின்றனர். இப்பொழுது உள்ள உலவிகளில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டுள்ள ஒரே உலவி இது தான். மற்ற உலவிகள் இதன் வருகையால் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. இந்த மென்பொருள் கூகுளில் தயாரிப்பு என்பது இதன் கூடுதல் பலமாகும். தற்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை chrome 16 வெளியிட்டு உள்ளனர்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Google Chrome

PicPick 3.1.0
கணினி விண்டோக்களை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க உதவும் மிகவும் பயனுள்ள இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளில் வெறும் ஸ்க்ரீன் ஷாட் வசதி மட்டுமின்றி Image Editor, Color Picker , White Board, Cross Hair மற்றும் பல வசதிகள் அடங்கி உள்ளது. இந்த மென்பொருளை உபயோகிப்பதும் மிகவும் சுலபமாக இருப்பதால் பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - http://picpick.org/download

Firefox 9.0
உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 9.0



Avast 6.0.1367
பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருளாகும். கணினிகளில் உள்ள வைரஸ்களையும், மால்வேர்களையும் சரியாக கண்டறிந்து அழித்து கணினியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் இலவச மென்பொருளாகும். இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களில் இந்த மென்பொருள் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Avast 6.0.1367.

இந்த தகவலை சமூக தளங்களில் பகிர்ந்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

21 comments :

  1. மிகமிகப் பயனுள்ள ஐந்து மென்பொருட்களை வழங்கியுள்ளீர்கள் சசி சார். மிகமிக நன்றி!

    ReplyDelete
  2. நல்ல தகவல். நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாப்ள எல்லாம் பயனுள்ள விஷயங்கள்யா...எப்ப பாரு நன்றி சொல்ரேன்..ஒரு மாறுதலுக்கு...thankyou and no medicine ஹிஹி

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல்கள் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  7. கணினியில் இருக்க வேண்டிய விஷயங்கள்...

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. அன்பு நண்பரே வணக்கம்!

    கணினி சார், முக்கியமான ஐந்து மென்பொருட்களின் தரவிறக்கம் பற்றி தாங்கள் இட்டிருக்கும் இப்பதிவானது நிச்சயமாக எம் அனைவருக்குமே பயன் மிக்கது!

    உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    அன்புடன் ஈழவயல்

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி சார் பகிர்வுக்கு. picpick, avast டவுன்லோட் பண்ணியாச்சு.


    வாங்க வாழ்த்துங்க
    செல்லக் குட்டி பிறந்தநாள்

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளீர்கள், நன்றி.

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல்.. நன்றி நண்பரே!!

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  13. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  14. பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. பதிவிற்கு நன்றி ! ! !

    ReplyDelete
  16. மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா!

    ReplyDelete
  17. சசிகுமார் உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதகைருந்து வருகிறது. நானும் ஒரு வலைபூ வாசி தான் எனது வலைபூவன www.sindhikkalam.blogspot.com தளத்தை பார்த்து உங்களது விமர்சனதைக்கூரவும்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press