பிளாக்கர் வலைப்பூக்களில் கவிதை,கட்டுரை, அரசியல், திரை விமர்சனம் இப்படி அவரவர் விருப்பப்படி பதிவு எழுதி கொண்டிருக்கிறோம். பல எழுத்தாளர்களை வெளி கொண்டுவந்த இந்த பிளாக்கர் தளத்திற்கு நன்றி. ஒவ்வொரு பதிவரும் விரும்புவது அவர்களின் பதிவுகள் பெரும்பாலனவர்களை சென்றடைய வேண்டுமென்பதே. ஆதலால் நம் பதிவுகளை திரட்டிகளிலும், சமூக தளங்களிலும் இணைக்கிறோம். இந்த சமூக தளங்களில் பிரபலமான தளமான ட்விட்டர் தளத்திலும் நம் பதிவுகளை இணைக்கிறோம். பதிவு போட்டு ஒவ்வொரு முறையும் இதில் இணைக்க வேண்டியதாக உள்ளது. இதை மாற்றி நாம் பதிவு போட்டவுடன் ட்விட்டரில் தானாகவே அப்டேட் ஆகும் படி செய்வது என பார்ப்போம்.
இதற்க்கு பல தளங்கள் இருந்தாலும் கூகுளின் தளமான பீட்பர்னரின் உதவியுடன் எப்படி ஆட்டோ பப்ளிஷ் செய்வது என பார்ப்போம்.
- முதலில் உங்கள் பீட்பர்னர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு உள்ள உங்களின் Feed Id மீது கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
- அடுத்து Publicize ==> Socialize என்பதை கிளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது உங்களுக்கு இன்னொரு பகுதி ஓபன் ஆகும் அதில் உள்ள Add a Twitter Account என்பதை கிளிக் செய்து உங்கள் ட்விட்டர் கணக்கின் User Name கொடுக்கவும்.
- கீழே படத்தில் உள்ளதை போல அனைத்தையும் மாற்றம் செய்யுங்கள்.
- படத்தில் உள்ளது போல சரியாக செய்தவுடன் கீழே உங்கள் tweet Preview காட்டப்படும்.
- அடுத்து கீழே உள்ள Activate என்பதை கிளிக் செய்யுங்கள்.
- Activate என்பதை கிளிக் செய்தவுடன் இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிடும்.
இனி உங்களின் பதிவுகள் தானாக பிளாக்கரில் அப்டேட் ஆகிவிடும்.
Techshortly
சமூக தளங்களில் பகிர்ந்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
Comments