பேஸ்புக்கின் புதிய இலவச மென்பொருள் Chat Messenger டவுன்லோட் செய்ய

சமூக தளங்களில் முதல் இடத்தில் இருப்பது பேஸ்புக் இணையதளம். உலகம் முழுவதும் 800மில்லியன் வாசகர்களை கொண்டே மிகப்பெரிய சமூக இணையதளம். இந்த தளத்தில் பல்வேறு வசதிகள் உள்ளது. இப்பொழுது இந்த நிறுவனம் புதிய  Chat messanger இலவச மென்பொருள் ஒன்றை வெளிட்டுள்ளது.  Chat messanger  மென்பொருள் மூலம் பேஸ்புக் தளத்திற்கு செல்லாமலே கணினியில் இருந்தே வாசகர்களிடம் அரட்டை அடிக்கலாம், உங்கள் நண்பர்கள் புதிதாக பகிர்ந்த பதிவுகளை காணலாம், மற்றும் உடனுக்குடன் notifications காணலாம். இந்த மென்பொருளை விண்டோஸ் 7 கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும். இதற்க்கு முன்னர் மூன்றாம் தர மென்பொருளே chat செய்ய இருந்தது. இப்பொழுது பேஸ்புக் நிறுவனமே இந்த மென்பொருளை வெளியிட்டது.


  • இதற்க்கு முதலில் இந்தFacebook Messenger லிங்கில் கிளிக் செய்து பேஸ்புக் தளத்திற்கு சென்று அங்கு உள்ள one-time setup என்ற லிங்கை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • மென்பொருள் டவுன்லோட் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். 
  • இன்ஸ்டால் ஆகியவுடன் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் Login என்ற பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்து பேஸ்புக் தளத்தில் நுழைந்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு விண்டோ வரும் அதில் Keep me Logged in என்ற பட்டனை அழுத்தவும். 
  • அவ்வளவு தான் உங்கள் நண்பர்களில் ஆன்லைனில் இருப்பவர்களை இந்த மென்பொருள் காட்டும். அதில் விருப்பமானவர்களுடன் அரட்டை அடித்து மகிழலாம். 
  • மற்றும் ஒரே விண்டோவில் பலபேருடன் அரட்டை அடிக்கும் வசதியும் இதில் உள்ளது.
Note: இந்த மென்பொருளில் logout வசதி இல்லை ஆகவே உலவியில் பேஸ்புக்கில் logout கொடுத்தால் மட்டுமே logout ஆகும்.

இந்த தல்கவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Comments