Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

SOPA க்கு ஆதரவு: ஒரு வாரத்தில் 72000 டொமைனை இழந்தது GoDaddy நிறுவனம்

சமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய் உள்ளன. எகிப்து மக்கள் புரட்சிக்கு முக்கிய காரணமாக இருந்த சமூக தளங்கள் எங்கு நம்ம நாட்டுக்கும் பிரச்சினையை கொண்டு வந்துவிடும் என எண்ணி ஒவ்வொரு ஆட்சியாளர்களும் வயிற்றில் புளியை கரைத்து கொண்டு உள்ளனர். ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்தியாவிலும் சமூக தளங்களை தடை செய்யுமாறு மத்திய அமைச்சர் கபில்சிபல் அனைத்து இணைய நிறுவனங்களையும் அழைத்து பேசியுள்ளார் என்பது அனைவரும் அறிவோம்.

சரி விஷயத்துக்கு வரும் இணையதள விளம்பரம் மூலம் அமெரிக்காவில் ஆட்சியை பிடித்த ஒபாமா அமெரிக்காவில் ஒரு புதிய சட்டத்தை அமல் படுத்த முயற்சித்தார். அதாவது குறிப்பிட்ட இணையதளங்களை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் புதிய சட்டத்தை SOPA(Stop Online Piracy Act) கொண்டு வந்தார். இதற்க்கு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பிரபல இணைய நிறுவனங்களான Facebook, Google, Twitter, LinkedIn போன்ற அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பெரிய தலைகளே இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருக்கும் பொழுது பிரபல Domain மற்றும் ஹாஸ்டிங் வழங்கும் நிறுவனமான Go Daddy இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது(உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை). ஏற்கனவே கடும்கோபத்தில் இருந்த அமெரிக்க மக்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் எரிச்சலை கிளப்பியதால் அனைவரின் கோபமும் Godaddy நிறுவனம் மீது திரும்பியது(எங்கயோ போற மாரியாத்தா என் மேல கொஞ்சம் ஏறு ஆத்தா).

அறிவிப்பை வெளியிட்ட அன்று ஒரு நாள் மட்டும் 8,800 டொமைன் கணக்குகள் இந்த தளத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் தங்கள் டொமைனை இணைத்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.

Monday - 8800
Tuesday - 13,000
Wednesday - 14,500
Thursday - 15000
Friday - 21,054

விக்கிபீடியா உரிமையாளர் Jimmy Wales அறிவிப்பின் படி விக்கிபீடியா டொமைனும் Godaddy நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு விட்டது. ட்விட்டரில் அவர் பகிர்ந்த அறிவிப்பை பாருங்கள்.


இப்படி ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே சென்ற எதிர்ப்பால் ஒருவாரத்தில் 72,000 டொமைன் பெயர்கள் Go Daddy நிறுவனத்தில் இருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர்ந்து விட்டன. இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத Go Daddy நிறுவனம் உடனே பல்டி அடித்தது SOPA க்கு கொடுத்த ஆதரவை வாபஸ் வாங்கியது. ஒவ்வொருவருக்கும் போன் செய்து Transfer செய்ய வேண்டாம் என பிச்சை எடுக்காத குறையாக கெஞ்சியது. ஆனால் யாரும் சமாதானம் ஆகவில்லை(அதென்ன இந்தியாவா என்னவேனாலும் சொல்லிட்டு மன்னிப்பு கேட்டால் மன்னிச்சு விட). அது மட்டுமில்லாமல் நாளை (டிசம்பர்29) Go Daddy நிறுவனத்தில் இருந்து விலகும் நாளாக(Move Your Domain Away from GoDaddy Day) அறிவித்து உள்ளனர். இதுல எத்தனை பேர் விலக போறாங்கன்னு தெரியல.

யோசிக்காமல் சொன்ன ஒரு வார்த்தையால் GoDaddy நிறுவனம் மிகப்பெரிய வருமான இழப்பை பெற்று உள்ளது. GoDaddy நிறுவனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது. மற்றும் GoDaddy நிறுவனம் Transfer செய்யும் வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பெரும்பாலானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது மேலும் கோபத்தை ஏற்ப்படும் என நினைக்கிறேன். இன்னும் என்ன ஆகிறது என பொருத்து இருந்து பார்க்கப்போம்.

இந்த SOPA சட்டம் அமுலுக்கு வந்தால் என்னென்ன நிகழும் என்பதை இங்கு What is SOPA and How it works [Infographic] சென்று பார்த்து கொள்ளுங்கள்.

GoDaddy நிறுவனம் அறிய வேண்டிய பழமொழிகள்:
 • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
 • ஊரோடு ஒத்து வாழ்
 • பொன்னை போட்டால் எடுத்துவிடலாம் சொல்லை போட்டால் எடுக்க முடியாது.
ஏதோ நம்மால் முடிந்தது உங்களுக்கும் ஏதாவது தெரிந்தால் சொல்லிட்டு போங்க..

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

18 comments :

 1. இணையதளங்களின் வேகத்தை இதன்மூலம் அறிந்திருப்பார்கள் அந்த நிறுவனத்தினர்..!!

  ReplyDelete
 2. அட இதுக்குத்தான் எதையும் யோசித்து பேச வேண்டு.

  நல்ல தகவல்

  ReplyDelete
 3. வார்த்த.. வார்த்த .. வார்த்த ... வார்த்த முக்கியம்!

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா. சரியான நக்கல் அண்ணா.

  ReplyDelete
 5. அதான் யோசித்து பேசனும்....

  யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொள்வது போல்தான் இது...


  இதனால் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு எவ்வளவு என்று சொல்லமுடியுமா சசி...?

  ReplyDelete
 6. ஒத்த வார்த்தையால பொழப்பு போச்சே....
  மாப்ளே அந்த பொன்மொழிகள் இதுக்குதான் கேட்டியா?

  ReplyDelete
 7. very useful post

  www.astrologicalscience.blogspot.com

  ReplyDelete
 8. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 9. கொய்யால இதுக்கு பேர்தான் தனக்கு தானே ஆப்படித்துக் கொள்வது..

  ReplyDelete
 10. நம் பலத்தை அரசியல் வியாதிகள் அறிந்திருக்கிறார்கள்
  நாம்தான் அறியவில்லையோ ?
  அருமையான தகவலைத் தந்த பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  த.ம 7

  ReplyDelete
 11. அருமையான தகவல்! நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. அந்நிறுவனத்திற்கு பொருந்தும் சரியான் பழமொழிதான்.

  ReplyDelete
 13. கொய்யால இதுக்கு பேர்தான் தனக்கு தானே ஆப்படித்துக் கொள்வது..

  அன்புடன்
  ப.ராஜா

  ReplyDelete
 14. தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டது

  இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

  ReplyDelete
 15. Arumaiyana infn. Nalla pazhamoligal. Vithiyasamana pathivu.

  TM 11.

  ReplyDelete
 16. ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  ஊரோடு ஒத்து வாழ்
  பொன்னை போட்டால் எடுத்துவிடலாம் சொல்லை போட்டால் எடுக்க முடியாது.


  உண்மைதான் நண்பா

  அருமையான தகவல்

  த.ம 10
  ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

  ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 17. சசி,

  இதான் ‘ நண்டு குழுத்தா, வங்குல தங்காது’ன்னு சொல்லுவாங்க.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press