Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

பயர்பாக்சை முந்தியது கூகுள் குரோம் [Stats Counter]


இணையத்தில் உலவிகளுக்கான போட்டியில் பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது குரோம். குரோமின் எளிமையான தோற்றத்தாலும் இணைய உபயோகம் வேகமாக இருப்பதாலும் பெரும்பாலானவர்கள் குரோம் உலவியை தொடர்ந்து உபயோகித்து கொண்டு இருக்கின்றனர். குரோமின் வளர்ச்சியை கண்டு பல புதிய பதிப்புகளை பயர்பாக்ஸ் வெளிவிட்டாலும்(கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்) கூகுள் குரோம் தொடர்ந்து கணிசமாக வளர்ந்து கொண்டு உள்ளது. Internet Explorer உலவி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.



உலகளவில் 25.69% பேர் குரோமையும், பயர்பாக்சை 25.23% பயனர்களும், IE உலவியை 40.63% பயனர்களும் உபயோகிக்கின்றனர். இதில் IE பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்தில் சுமார் 18% குறைந்துள்ளது.


இந்தியாவில் உலவி பயன்பாட்டின் படி கூகுள் குரோம் முதல் இடத்திலும், பயர்பாக்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவில் Internet Explorer உலவியின் வளர்ச்சி அகல பாதாளத்திற்கு சென்று விட்டது.  


இதே வளர்ச்சியில் இருந்தால் அடுத்த ஆண்டில் முதல் இடத்திற்கு கூட வந்து விடும் என நினைக்கிறேன். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த தகவல உங்களின் நண்பர்களுடன் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சசிகுமார்

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

  1. இனிய காலை வனக்கம் மச்சி,
    பெட் காப்பி சாப்பிட்டாச்சா;-)))

    ஆதாரங்களோடு அருமையான ஒப்பீட்டு அலசல். பார்ப்போம் அடுத்த வருடம் பயர் பாக்ஸா இல்லே கூகிள் குரோமா என்று!

    ஹி...ஹி....

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அப்படியும் கூட நடக்கலாம்.. வாய்ப்பிருக்கிறது. தகவலுக்கு நன்றி சசி!

    ReplyDelete
  4. வணக்கம் பாஸ் தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  5. எவ்வளவு விவரங்கள் அடாடா. எவ்வளவு உழைத்து எங்களுக்கு இந்த பயனுள்ள தகவல்களை தந்துள்ளீர்கள்.நன்றி நன்றி.தொடரவேண்டும் உங்கள் இந்த சீரிய பணி. வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  6. நல்ல தகவல் பாஸ்.

    ReplyDelete
  7. இப்போ எல்லாம் மல்ட்டிமீடியா கண்டெண்ட்ஸ் லோட் ஆவதில் குரோம்-இல் பிரச்சினை உள்ளத்து. கூடிய விரைவில் அதை சரி செய்வார்கள் என்று நம்புவோமாக...

    ReplyDelete
  8. ஆனால் இந்த கூகுளட குரோமில் தமிழ்விசை வேலை செய்ய வில்லை சசி...

    வேறு ஏதாவது மாற்று இருக்கா..

    ReplyDelete
  9. Nan crome than no1-nu
    solluven......

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி மச்சி, க்ரோம் பிரவுசர் நல்லாத்தான் இருக்கு, தரமானது எப்போது No 1 .

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி நண்பரே..

    கூகுள் நம்பர் ஒன்னா வருவதில் மாற்றம் இல்லனு நினைக்கிறேன்

    ReplyDelete
  12. Google Google than Sago. Athoda ellaa products-m arumai than.
    TM Vote potachi.

    ReplyDelete
  13. பாப்போம் பாப்போம் அடுத்த வருடம் பயர் பாக்ஸா இல்லே கூகிள் குரோமா என்று!நீங்க கலகுங்க அண்ணா ...

    அன்புடன்
    P.ராஜா
    http://cinnapayan.blogspot.com

    ReplyDelete
  14. ////////////
    இந்த தகவல உங்களின் நண்பர்களுடன் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    ///////////
    கூகிளுக்கு கூஜா தூக்காதீர்கள் நண்பரே. மைக்ரோசாப்ட் போன்ற இன்னொரு மலைப்பாம்பாக வளர்ந்து வருகிறது இந்த நிறுவனம். சுதந்திரச் செயலிகளை ஆதரிக்காவிட்டால் திரும்ப பயர் பாக்ஸ் போன்ற செயலிகள் தோன்றாது. திரும்ப ஒரு இருண்ட காலம் நிச்சயம் உண்டு.

    ReplyDelete
  15. ///கூகிளுக்கு கூஜா தூக்காதீர்கள் நண்பரே. மைக்ரோசாப்ட் போன்ற இன்னொரு மலைப்பாம்பாக வளர்ந்து வருகிறது இந்த நிறுவனம். சுதந்திரச் செயலிகளை ஆதரிக்காவிட்டால் திரும்ப பயர் பாக்ஸ் போன்ற செயலிகள் தோன்றாது. திரும்ப ஒரு இருண்ட காலம் நிச்சயம் உண்டு.///
    100% true.

    ///கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்///
    this is absolutely wrong. Most of the features are introduced only Mozilla. Like popup blocker, tabs, Following W3C standards and much more. May be this is true for IE case. Nowadays Firefox coping feature from Google. I like Chrome for its speed.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press