VLC மீடியா பிளேயரை அழகழகான தோற்றத்திற்கு மாற்ற - VLC SKINS

VLC மீடியா பிளேயர் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது. சில வசதிகள் இதில் மறைந்து உள்ளது(VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்). இன்று நாம் பார்க்க போகும் வசதியும் ஒரு விதத்தில் மறைந்து உள்ளதுதான். எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்து கொண்டே இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும் அது தான் மனித இயல்பு. அப்படி வருடக்கணக்கில் உபயோகித்து கொண்டிருக்கும் VLC மீடியா பிளேயரை ஒரே தோற்றத்தில் பார்த்து சலித்து விட்டதா? கவலையை விடுங்கள். VLC மீடியா பிளேயரை வெவ்வேறு அழகழகான உங்களுக்கு பிடித்த தோற்றத்திற்கு ஒரே நிமிடத்தில் மாற்றி விடலாம். உதாரணத்திற்கு கீழே உள்ளதை பாருங்கள்.

அழகிய தோற்றத்திற்கு மாற்றும் முறை:
  • முதலில் இந்த தளத்திற்கு www.videolan.org/vlc/skins.php செல்லுங்கள். 
  • இங்கு சுமார் 150க்கும் அதிகமான VLC தோற்றங்கள் இருக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தோற்றத்தை தேர்வு கொள்ளுங்கள்
  • உங்களுக்கு பிடித்த தோற்றத்தின் மீது கிளிக் செய்தால் அந்த தோற்றம் பெரியதாக காட்டும் அதில் உள்ள download லிங்கை அழுத்தி அந்த டிசைனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
  • அல்லது அனைத்து தோற்றங்களும் வேண்டுமென்றால் கீழே படத்தில் நான் காட்டி இருக்கும் இடத்தில் உள்ள கிளிக் செய்து அனைத்து தீம்களையும் ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இப்பொழுது நீங்கள் டவுன்லோட் செய்த .vlt பைலை(ZIP பைலாக டவுன்லோட் செய்திருந்தால் Extract செய்து கொள்ளுங்கள்) CUT செய்து C:\Program files\VideoLan\VLC\Skins என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும். நீங்கள் VLC பிளேயரை வேறு டிரைவில் இன்ஸ்டால் செய்து இருந்தால் C க்கு பதில் அதை தேர்வு செய்து கொள்ளவும். 

சரியான இடத்தில் பேஸ்ட் செய்ததும் அதை அந்த விண்டோவை மூடி விடுங்கள். இப்பொழுது VLC மீடியா பிளேயரை ஓபன் செய்யுங்கள். அதில் Tools ==> Preferences என்பதை கிளிக் செய்யுங்கள்.


அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் SKIN பகுதியில் CUSTOM SKIN என்பதை தேர்வு செய்து நீங்கள் முன்பு பேஸ்ட் செய்த உங்களுக்கு விருப்பமான .vlt பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


.vlt பைலை தேர்வு செய்யும் பொழுது already exit என்ற எச்சரிக்கை செய்தி வந்தால் அதில் Yes என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான தோற்றத்தை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்துங்கள். 

இப்பொழுது உங்கள் VLCமீடியா பிளேயரை க்ளோஸ் செய்து விட்டு மறுபடியும் ஓபன் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய தோற்றத்திற்கு VLC மீடியா பிளேயர் மாறி இருக்கும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் கீழே உள்ள சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Comments