Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

புதிய தலைமுறை செய்தி சேனலை இணையத்தில் நேரடியாக(Live) காண

ஒரே செய்தியை ஆறு மணி நேரத்திற்கும் மேல் பார்த்து கொண்டிருந்த நமக்கு புதிய தலைமுறை சேனல் ஒரு நல்ல மாற்று தான். அரசியலும், தொலைக்காட்சியும் பின்னி கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் எந்த சேனலிலும் நடுநிலையான செய்திகளை பார்க்க முடியாமல் இருந்த நமக்கு புதியதலைமுறை ஆறுதல் அளிக்கிறது. ஆங்கில சேனல்களுக்கு இணையாக செய்திகளை விரைவாகவும், தெளிவாகவும், விரிவாகவும் அளிப்பதால் பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய சேனலாக மாறி உள்ளது புதிய தலைமுறை செய்தி சேனல் என்பதை மறுப்பதற்கில்லை.


வெளிவந்த ஒரு சில மாதங்களிலேயே ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த புதிய தலைமுறையை பாராட்டி தான் ஆக வேண்டும். அரைத்த மாவையே மாற்றி மாற்றி அரைத்து கொண்டு இருக்காமல் வித்தியாசத்தை அளிப்பதும் வெற்றி காரணம் என நினைக்கிறேன். புதிய தலைமுறையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் இதில் பணி புரியும் பெரும்பாலானவர்கள்  இளைஞர்கள் என நினைக்கிறேன். இவர்கள் அளிக்கும் உடல் உழைப்பு தான் இவ்வளவு விரைவில் மக்கள் மனதில் இடம் பிடிக்க முக்கிய காரணமாகும்.செய்தி பார்த்து கொண்டு இருக்கும் பொழுது புதிய தலைமுறை சேனலை இணையத்திலும் நேரடியாக காணலாம் என்ற அறிவிப்பை பார்த்தேன். ஏற்க்கனவே பல ஆங்கில சேனல்களை நேரடியாக இணையத்தில் காணும் வசதி இருந்தாலும் நம் தமிழுக்கு புதுசு என்பதால் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  

வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் உடனுக்குடன் செய்திகளை நேரடியாக இணையத்தில் நம் தாய்மொழியில் காணும் வசதியை ஏற்ப்படுத்தி கொடுத்த புதிய தலைமுறைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 

இந்த அறிவிப்பை பெரும்பாலானவர்கள் பார்த்து இருக்கலாம், ஆனாலும் இந்த வசதிக்காக இவர்களை பாராட்ட வேண்டும் என தோன்றியது ஆதலால் இந்த செய்தியை உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.

இந்த லிங்கில் கிளிக் செய்தும் சேனலை நேரடியாக காணலாம்.

இந்த வசதி சென்ற மாதமே வெளி வந்திருக்கிறது என நினைக்கிறேன் இன்று காலையில் தான் நான் பார்த்தேன். எண்ணை போல பராக்காமல் தவற விட்டவர்களுக்கா இந்த பதிவு.

Tech Shortly

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

17 comments :

 1. நல்ல தகவல். நன்றி. சேனலைப் பற்றி உயர்வாகச் சொல்லக் கேட்டிருக்கிறேனே தவிர நானும் பார்த்ததில்லை.

  /வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் /

  வெளிமாநிலத்திலும் தெரிவதில்லை.

  ReplyDelete
 2. நான் கண்டு வருகிறேன் உங்களுக்கும் நன்றிங்கோ!

  ReplyDelete
 3. தகவலுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 4. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 5. நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன் சசி...

  தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 6. சன் செய்திகளும் இப்போ லைவ் கெர்டுக்குறாங்க...

  அதற்கான லி்ங தினகரன் தளத்தில் இருக்கிறது..

  ReplyDelete
 7. இணையத்தில் அதாவது bloggeril எப்படி இணைப்பது

  ReplyDelete
 8. கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது.

  மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை $2,045,801.25 பணம் தன் வாடிக்கையளர்களுக்கு அளித்துள்ளது. இதில் உங்களை இணைத்து கொண்டு நீங்களும் இணையத்தில் பணம் சம்பாரியுங்கள்.

  மேலும் விவரங்களுக்கு : http://www.bestaffiliatejobs.blogspot.in/2012/01/get-paid-every-30-seconds.html

  ReplyDelete
 9. தகவலுக்கு நன்றி .. நானும் தந்தோரும் பார்த்து வருகிறேன்.. மற்ற எல்லா தமிழ் செய்தி சேனல் -ஐ விட நல்லாவே இருக்கு

  ReplyDelete
 10. தகவலுக்கு நன்றி .. நானும் தந்தோரும் பார்த்து வருகிறேன்.. மற்ற எல்லா தமிழ் செய்தி சேனல் -ஐ விட நல்லாவே இருக்கு

  ReplyDelete
 11. வீட்டுக்கு போனால் பொண்டாட்டி சீரியல் பார்க்கனும்ன்னு நம்மக்கிட்ட ரிமோட்டை தரதில்லை. இந்த லிங்க் மூலமா ஆபிசுலயே செய்திகள் பார்த்துக்கிடலாம். நன்றி மாப்ள

  ReplyDelete
 12. பகிர்ந்தமைக்கு நன்றி சசி..! புதிய தலைமுறைக்கும் சன்நியூசிற்கும்தான் போட்டியாமே.. உண்மையா?

  ReplyDelete
 13. புதிய தமிழ் திரைப்படங்களை பார்வையிட gotamil.net... நண்பர்களே உங்களின் நண்பர்களுக்கும் இதை தெரியபடுத்தவும்.

  ReplyDelete
 14. புதிய தலைமுறை சேனல் மட்டும் அல்ல தமிழில் முப்பது chanelக்கு மேலாக
  பார்க்கலாம் முகவரி :http://livetvchannelsfree.in/ this site best viewed firefox users only .regards , http://orathanadukarthik.blogspot.com/

  ReplyDelete
 15. Vanakkam Nan Muthu, Puthiya Thalaimurai TV verum adhigaarigal alavileye nindru vidugiradhu. Innum mel sendru arasaangathai velipadayaga, adhan thavarugalai vimarsikka vendum.

  Sevai thodarattum.

  ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press