Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகள்

சமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.  இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். 

பழைய தோற்றத்தில் மேலே இருந்த மெனு பட்டன்களை இடது ஓரத்தில் கொண்டு வந்து உள்ளது. மற்றும் அந்த பட்டன்களை நமக்கு வேண்டிய படி drag செய்து நகர்த்தி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் Explore என்ற ஒரு புதிய வசதியும் உள்ளது. அதில் சமீபத்தில் கூகுள் பிளசில் அதிகமாக +1 செய்யப்பட இடுகைகள் பார்த்து கொள்ளலாம்.




புதிய தோற்றத்தை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.



உங்கள் இடுகையை +1 செய்தவர்களின் ப்ரோபைல் போட்டோக்களும் தெரிகிறது. 

ப்ரோபைல் பக்கத்திற்கு கவர் போட்டோ:


பேஸ்புக் தளத்தில் உள்ளது போலவே இனி கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்திற்கு இனி Cover Photo வை அமைத்து கொள்ளலாம். முதலில் உங்கள் புரோபைல் பக்கத்திற்கு சென்று Edit Profile என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அதில் Change Cover Photo என்ற லிங்கை அழுத்தி உங்களுடைய கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களின் கவர் போட்டோ குறைந்தது 940X180 அளவு இருக்க வேண்டும். 


உங்களின் கவர் போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி உங்கள் பிளஸ் profile பக்கத்திற்கு கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மேலும் விரிவாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




இந்த புதிய தோற்றத்தில் மேலும் ஏதாவது புதிய வசதிகள் இருப்பின் அவைகளை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம். 

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது கூகுளுக்கு மிகவும் பொருந்தும். இந்த புதிய தோற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் இன்னும் எத்தனை நாள் இதனை வச்சிருக்க போகுதோ தெரியல? உங்களுக்கு இந்த தோற்றம் பிடிச்சிருக்கா 

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

16 comments :

  1. புதிய தகவல்கள் ! ரொம்ப நன்றிங்க !

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  3. நாலா தகவல் அண்ணா நன்றி...

    ReplyDelete
  4. ம்ம் மாற்றம் ஒன்றே மாறாதது ..!

    ReplyDelete
  5. லேபில் search செய்யும் போது வரும்.
    "-----லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி".
    என்பதை நீக்குவது எவ்வாறு என தயவு செய்து எழுதவும்.

    ReplyDelete
  6. புதிய தோற்றம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி சார்

    ReplyDelete
  7. புதிய தகவலை பகிர்தமைக்கு நன்றி அண்ணா

    ReplyDelete
  8. அந்த white space மட்டும் இல்லாவிட்டால் சரி...

    //ஆனால் இன்னும் எத்தனை நாள் இதனை வச்சிருக்க போகுதோ தெரியல? //

    அடுத்த தோற்றமும் நமக்கு நிச்சயம் பிடிக்கும்..

    ReplyDelete
  9. பதிவிற்கு நன்றி...

    என்னுடைய ப்ளாகில் Search Buttonயில் எதாவது தேடினால் ஒரே ஒரு பதிவு மட்டும் தான் தெரிகின்றது...எதனால் என்று தெரியவில்லை...

    தெரிந்தால் சொல்லுங்க...

    ReplyDelete
  10. Youtube app இப்போது இல்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. new Google+ super
    http://skumar-computer-tips.blogspot.in/

    ReplyDelete
  12. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
    இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
    தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    http://tamil.dailylib.com

    To get vote button
    http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் போஸ்ட்

    ReplyDelete
  13. நல்ல மாறுதல்கள்.. மற்ற மாற்றங்களை ஏற்கனவே கண்டிருந்தாலும், இந்த பதிவின் மூலமே புரபைல் போட்டோ பற்றி அறிந்தேன்

    நன்றி!

    ReplyDelete
  14. அருமையான பதிவு

    வாழ்த்துகள்..

    உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
    DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ் DailyLib

    To get the Vote Button

    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

    நன்றி
    தமிழ் DailyLib

    ReplyDelete
  15. நல்ல தகவல் நண்பா.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press