Announcement:

This is a Testing Annocement. I don't have Much to Say. This is a Place for a Short Product Annocement

கூகுள் டிரைவில் பகிரும் பைல்களை மற்றவர்கள் டவுன்லோட் செய்ய முடியாமல் தடுக்க

கூகுளின் சமீப வெளியீடு கூகுள் டிரைவ் எனப்படும் Cloud Storage வசதியாகும். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவ் சேவையை வழங்கியது.
இதன் மூலம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து வைத்து பின்பு எங்கு இருந்து எந்த நேரத்திலும் கணினி மற்றும் Android சாதனங்களில் இருந்து இயக்க முடியும். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட பைல்களை நண்பர்களிடமும் சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

மற்றவர்களிடம் நாம் பகிரும் பைல்களை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி கூகுள்  
டிரைவில் உள்ளது. ஆதலால் மற்றவர்களிடம் பகிரும் பைல்களைகளை டவுன்லோட் செய்ய முடியாதபடி  தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.


  • முதலில் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் நுழைந்து நீங்கள் பகிர வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • அதில் File மெனுவை ஓபன் செய்து அதில் உள்ள Prevent Viewers from Downloading என்ற லிங்கை அழுத்தவும்.



  • பிறகு எப்பொழுதும் போல Share பட்டனை அழுத்தி உங்கள் பைலை சமூக தளங்களிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம். 
  • நீங்கள் பகிர்ந்த லிங்கில் பைலை ஓபன் செய்தால் அவர்களுக்கு டவுன்லோட் வசதி செயலற்று இருக்கும். 
  • அவர்களால் உங்கள் பைலை நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது. 



இனி டவுன்லோட் செய்து கொள்வார்கள் என்ற பயம் இல்லாமல் உங்கள் பைலை மற்றவர்களிடத்தில் பகிரலாம்.


இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Sasi Kumar

இணையத்தில் கொட்டி கிடக்கும் தொழில்நுட்ப தகவல்களை நம் அழகு தமிழில் மொழிபெயர்த்து தரும் உங்களில் ஒருவன்.

8 comments :

  1. எனக்கும் கூகுள் டிரைவ் கிடைத்துவிட்டது ஆனால் நான் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை, இருப்பினும் இது உபயோகமான தகவல் தான்..!

    ReplyDelete
  2. நியு இன்பர்மேஷன் டேங்க்ஸ்

    ReplyDelete
  3. Me too got Google Drive, But yet to use it before that
    this post will very useful for me to protect my files.
    Thank you.

    ReplyDelete
  4. நல்ல தகவல் ! நன்றி ! அப்பாடா ! இப்ப நிம்மதி !

    ReplyDelete
  5. நல்ல தகவல் ! நன்றி ! அப்பாடா ! இப்ப நிம்மதி !

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு. நன்றி சசி சார்.

    ReplyDelete

Copyright @ 2013 வந்தேமாதரம் . Designed by Templateism | Love for The Globe Press