படத்துடன் கூடிய Recent Post Widget பிளாக்கரில் வரவைக்க

நம்முடைய பிளாக்கரில் படத்துடன் கூடிய Recent Post Widget எப்படி வர வைப்பது என்று இன்று நாம் பார்க்க போகிறோம். 

இது மிகவும் சுலபமான விஷயம். மொத்தமாக 2 நிமிடம் தான் ஆகும். ஆனால் இதனுடைய வேலை சூப்பர இருக்கு.
     இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீழே உள்ள html Code காப்பி செய்து கொள்ளுங்கள்.

மேலே உள்ள Html Code காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌன்ட் நுழைந்து கொள்ளுங்கள். உங்கள் தளத்தில் பின்வரும் இடத்திற்கு செல்லவும்.
Dassboard - Layout - Add Html/Java Script -சென்று நீங்கள் காப்பி செய்த கோடினை பேஸ்ட் செய்யவும். முக்கியமானது அந்த html கோடினில் http://vandhemadharam.blogspot.com என்ற இடத்தில் மறக்காமல் உங்களுடைய URL சேர்க்கவும். (இதை நீங்கள் மாற்ற வில்லை எனில் என்னுடைய பதிவுகள் தான் அங்கு தெரியும் அதற்க்கு நான் பொறுப்பல்ல.) இதை கீழே கொடுத்துள்ளேன் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் 
அவ்வளவு தான் அடுத்து கீழே உள்ள Save கிளிக் செய்யவும். உங்களுடைய தளத்தில் படத்துடன் கூடிய Recent Post Widget வந்திருக்கும். இதில் உங்கள் தளத்திற்கு ஏற்றது போல் ஏதேனும் மாற்றங்கள் செய்ய நினைத்தால் கீழே பார்க்கவும்.
1.boxwidth- இது widget அளவுகளை மாற்ற உங்களுக்கு தேவையான அளவு கொடுக்கவும்.
2.Border Color - இது விட்ஜெட்டின் Background color மாற்ற உங்களுக்கு தேவையான கலரின் hexadecimal அளவுகளை கொடுத்து மாற்றி கொள்ளவும்.
3.thumbwidth & thumbheight - இது படத்தின் நீள, அகலத்தை மாற்ற உதவுகிறது.(நான் கொடுத்திருக்கும் அளவே சரியாக இருக்கும் தேவைபட்டால் மாற்றிகொள்ளுங்கள்)
4.fntsize -     இது தலைப்பின் எழுத்து அளவை மாற்ற.
5. acolor -     இது தலைப்பின் நிறத்தை மாற்ற.
6. numpost - இது எத்தனை போஸ்ட் விட்ஜெட்டில் தெரியவேண்டும் என்று நீங்கள் மாற்றி கொள்ளலாம்.
அவ்வளவு தான் நண்பர்களே Save கொடுத்தால் உங்களுடைய தளத்தில் உங்கள் மாற்றத்துடன் கூடிய Recent Post Widget வந்திருக்கும்.

பதிவு பிடித்திருந்ததா என்று உங்கள் பின்னூட்டங்களில் கூறவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேட்கவும். 
இப்படிக்கு உங்கள் 

Comments