பிளாக்கரில் உங்கள் பதிவின் கீழ் உங்கள் Signature வரவைக்க

நாம் கஷ்ட்டப்பட்டு எழுதும் பதிவில் கீழே நம்முடைய கையெழுத்து இருந்தால் எப்படி நன்றாக இருக்கும் . ஆன்லைன் signature உருவாக்க நிறைய தளங்கள் உள்ளது. இதில் ஒன்றை தான் நாம் இங்கு காண போகிறோம். இத் தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.
1. உங்களுடைய பெயரை கொடுத்து விட்டு கீழே உள்ள NextStep பட்டனை கிளிக் செய்யவும்.
2. அடுத்து வரும் விண்டோவில் உங்களுக்கு தேவையான Font Style தேர்ந்தெடுக்கவும்.
3. அடுத்து தேவையான Size செலக்ட் செய்யவும். (3,4,5) ஆகியவை சரியாக இருக்கும்.
4. அடுத்து வரும் விண்டோவில் தேவையான Color செலக்ட் செய்யவும்.  
5. அடுத்து உங்கள் கையெழுத்து வரவேண்டிய சாய்வு (slope) செலக்ட் செய்யவும் பின்பு கீழே உள்ள NextStep பட்டனை அழுத்தவும் .
அவ்வளவு தான் உங்களுடைய கையெழுத்து தயாராகி விட்டது. உங்களுக்கு கீழே உள்ளதை போல் விண்டோ வரும்.  

இதில் நான் மேலே காட்டியுள்ள Want to Use This Signature என்பதனை க்ளிக் செய்யவும்.  

வரும் விண்டோவில் மேலே காட்டியுள்ள  Generate Html Code என்பதனை கிளிக் செய்யவும்  
அடுத்து வரும் விண்டோவில் Generate a Code for handwritten signature க்ளிக் செய்யவும். 


அடுத்து உங்களுடைய கையெழுத்து உடைய html code வந்திருக்கும் அந்த கோடினை காப்பி செய்து கொள்ளவும். காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளவும். பின்பு
DASSBOARD - SETTINGS - FORMATTING - செல்லவும். சென்று அந்த மெனுவில் கீழே உள்ள POST TEMPLATE என்ற கட்டத்தில் நீங்கள் காப்பி செய்த HTML CODE பேஸ்ட் செய்யவும். புரியாதவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கவும். 
   
அவ்வளவு தான் இனிமேல் நீங்கள் பதிவு எழுத new post அழுத்தியதும் உங்கள் Sinature இருக்கும். 
பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் தாரளமாக கேட்கலாம்.   

Comments