புதியவர்களுக்காக: பிளாக்கரில் தவறுதலாக Delete செய்த பதிவை திரும்பவும் கொண்டு வர

நாம் மிகவும் கஷ்ட்டப்பட்டு நம்முடைய நேரங்களை செலவிட்டு பதிவை எழுதுவோம். அப்படி எழுதிய பதிவை தவறுதலாக அழித்து விடுவோம். அதை எப்படி திரும்பவும் நாம் எந்த ஒரு மென்பொருட்கள் துணையும் இல்லாமல்  கொண்டுவருவது என்று பார்க்க போகிறோம். 
         நாம் இரண்டு வழிகளில் கொண்டு வரலாம்.

1. முதல் வழி:

 நாம் ஏதேனும் போஸ்ட்டை delete செய்த பிறகு நாம் அந்த விண்டோவை மூடாமல் அல்லது அந்த டேபை மூடாமல் அதே இடத்தில் இருந்தால் நம்முடை ப்ரௌசெரின் Back பட்டனை அழுத்துவதன் மூலம் அதை திரும்பவும் நம் தளத்திருக்கு கொண்டுவரலாம். நீங்கள் அழித்த பதிவு வரும் வரை back பட்டனை அழுத்தி கொண்டே இருங்கள்.


ஐயையோ நான் அந்த டேபை மூடி விட்டேனே என்ன பண்ணுவது என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. கவலையை விடுங்கள் அதற்காக தான் இரண்டாவது வழி.

2.இரண்டாவது வழி.

 நீங்கள் எந்த பிரௌசரில் பதிவை delete செய்தீர்களோ அந்த அந்த பிரௌசறை ஓபன் செய்து கொள்ளுங்கள். இதில் Ctrl+H ஒன்றாக அழுத்துங்கள் உங்களுக்கு history விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுக்கு தேவையான delete செய்த பதிவை பாருங்கள். முக்கியமானது நீங்கள் எந்த தேதியில் delete செய்திர்கள் எந்த நேரத்தில் delete செய்தீர்கள் என்று தெரிந்தால் நமக்கு தேடுவதற்கு சுலபமாக இருக்கும்.  உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும். 


விண்டோவில் நான் காட்டியிருப்பதை போல தான் delete செய்த பகுதி இருக்கும். என்னுடைய தளத்திருக்கு பதிலாக உங்களுடைய தளத்தின் பெயர் இருக்கும். உங்கள் பதிவை கண்டுபிடித்தவுடன் அந்த லிங்கை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 


 இது தான் நீங்கள் தேடிய பதிவு என்பதை உறுதி செய்து கொண்டு காப்பி செய்து உங்கள் தளத்தில் பேஸ்ட் செய்து கொள்ளவும். 
இதில் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.
பதிவு  பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறவும். 

Comments