ஜிமெயில் இருந்தே உங்கள் ட்விட்டரை கணக்கை கையாள

உங்கள் Twitter account உபயோகிக்க இனிமேல் twitter தளத்திற்கு தான் செல்ல வேண்டும் என்று  இல்லை இனிமேல் நீங்கள் உங்களுடைய ஜிமெயிலில் இருந்து கொண்டே உங்களுடைய ட்விட்டர் உபயோகித்து கொள்ளலாம். ட்விட்டர் தளத்தில் உள்ள அனைத்து  வசதிகளையும் நாம் இங்கு ஜிமெயிலில் இருந்து கொண்டே கையாளலாம். இதற்காக நாம் ட்விட்டர் தளத்திற்கு செல்லும் நேரம் நமக்கு மிச்சமாகும்.
  • இதற்க்கு முதலில் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • பின்னர் Settings- Labs - Add any Gadget by URL - Enable - Save Changes- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
  • உங்கள் ஜிமெயில் மாற்றிய அமைப்புகளை சேமித்து கொண்டு திரும்பவும் முகப்பு பக்கத்தில் வந்திருக்கும்.
  • இப்பொழுது மறுபடியும் உங்கள் ஜிமெயிலில் Settings பகுதிக்கு செல்லவும்.
  •  அங்கு புதியதாக சேர்ந்து உள்ள Gadget கிளிக் செய்யவும். 
  • அங்கு வரும் விண்டோவில் கீழே உள்ள URL முகவரியை காப்பி செய்து போடவும்.
http://www.twittergadget.com/gadget_gmail.xml

  • Add பட்டனை அழுத்தியதும் உங்கள் ஜிமெயிலில் Twitter Gadget சேர்ந்திருக்கும். இதை பார்க்க ஜிமெயிலின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • உங்கள் Chat பகுதிக்கு கீழே இந்த Twitter Gadget சேர்ந்திருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
  • இதில் உள்ள Sign in with Twitter என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் Allow என்பதை கிளிக் செய்யவும். 
  • அவ்வளவு தான் இனிமேல் உங்கள் ட்விட்டர் அக்கௌன்ட் ஜிமெயிலில் இருந்தே கையாளலாம்.
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும். 
  • இதில் Home, Replies, Directs, Favorites போன்ற நான்கு Tab இருக்கும். உங்களுக்கு இன்னும் Tab சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் அதன் அருகில் உள்ள + குறியை க்ளிக் சிது வரும் விண்டோவில் சேர்த்து கொள்ளுங்கள். 
  • இதில் குறிப்பிட்ட விஷயம் என்னவென்றால் உங்களுடைய Twitter gadget ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் தானாகவே Update ஆகி கொள்ளும். இந்த நேர இடைவெளி மாற்ற நினைத்தால் + குறியை அழுத்தவும்.  
  • உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து கொண்டு கீழே உள்ள Save பட்டனை அழுத்தினால் போதும். 

  • இதில் இன்னொரு விஷயம் உங்களுக்கு இந்த gadget சிறியதாக உள்ளது பார்ப்பதற்கு சிரமமாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கும் ஒரு வசதியை கொடுத்து உள்ளார்கள். 
  • Fullscreen Popout என்ற வசதி  உள்ளது. இதை கிளிக் செய்தால் உங்களுடைய Gadget ஒரு புதிய விண்டோவில் பெரியதாக ஓபன் ஆகும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பாருங்கள். 
இன்னும் இதில் பல வசதிகள் உள்ளது நண்பர்களே உபயோகித்து பாருங்கள் கட்டாயம் அனிவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 

டுடே லொள்ளு 

Photobucket
அதிகமா குடிக்காதேன்னு சொன்னனே கேட்டியா 

Comments