பிளாக்கர் தளத்தில் கேட்டது கிடைத்து விட்டது - புது வசதி

முன்பு நாம் பிளாக்கரில் நமக்கு தேவையான வசதிகளை நாமே கேட்டு பெற்று கொள்ளலாம் என்று ஒரு பதிவு போட்டு இருந்தேன் அந்த சமயத்தில் நானும் பயன் மிகுந்த இரு வசதிகளை கேட்டு இருந்தேன். 
  • Reply Button in Comments Section like Wordpress
  • Directly add gif file into blogger Post.
என்னை போல் ஏராளமானோர் இவ்வசதியை கேட்டு இருந்தனர். பிளாக்கர் தள நிர்வாகிகள் இதை கருத்தில் கொண்டு Gif பைலை நேரடியாக நம் பிளாக் பதிவில் இணைக்கும் வசதியை கொடுத்து உள்ளனர். இவ்வசதி எப்பொழுது இணைக்க பட்டது என எனக்கு சரியாக தெரியவில்லை. இன்று ஒரு பைலை அப்லோட் செய்யும் போது தான் கவனித்தேன் உடனே பதிவு போட்டேன்.
வழக்கமாக நாம் ஏதேனும் gif பைலை நம் பதிவில் வெளியிட வேண்டுமென்றால் அந்த படத்தின் html கோடிங்கை கொடுத்தால் தான் gif பைலை நம் பதிவில் தரவேற்ற முடியும். இனி அப்படி செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இந்த gif பைல்களை மற்ற படங்களை அப்லோட் செய்வது போல் நம் பதிவில் தரவேற்றி கொள்ளலாம்.
  • இதில் முக்கியமான ஒன்று படத்தின் அளவு (dimension) 300X300 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அவ்வளவு தான் வேறெந்த கட்டுபாடும் தேவையில்லை. நம் விருப்பம் போல் Gif பைல்களை நம் பதிவில் போட்டு கொள்ளலாம்.

டுடே லொள்ளு 


எங்க நாட்டு எல்லைக்குள்ள வந்தா மவனே செத்திங்க நீங்க 

நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து.   

Comments