- குரோமில் Settings பகுதிக்கு செல்லுங்கள். சென்று Options என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- படத்தில் காட்டியுள்ளதை போல் செல்லுங்கள். சென்ற உடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் நான் மேலே படத்தில் காட்டி இருக்கும் Reopen the pages that were open last என்ற ரேடியோ பட்டனை க்ளிக் செய்து கீழே உள்ள Close க்ளிக் செய்து கொள்ளவும்.
- அவ்வளவு தான் இனி நீங்கள் எப்பொழுது ஓபன் செய்தாலும் நீங்கள் கடைசியாக மூடிய அனைத்து டேப்களும் திறக்கும்.
மேற்கூறிய முறையில் நாம் செய்தாலும் அதில் அனைத்து டேப்களும் ஒரேநேரத்தில் மூடினால் தான் நமக்கு திரும்பவும் கிடைக்கும். ஆனால் இந்த Session Manager என்ற நீட்சியை குரோமில் நிறுவுவதன் மூலம் நாம் எப்பொழுது நினைத்தாலும் அந்த டேப்களை ஓபன் செய்து கொள்ளலாம். இந்த லிங்கில் Session Manager Add-On சென்று உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த ஐகானை க்ளிக் செய்தால் உங்களுக்கு இது போன்று ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் கீழே Save என்ற பட்டனை அழுத்திவிட்டால் போதும் அந்த நேரத்தில் ஓபன் செய்து வைக்கபட்டிருக்கும் அனைத்து பக்கங்களும் சேமிக்கப்படும் இனி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்த ஐகனை க்ளிக் செய்து ஓபன் கொடுத்தால் அனைத்து டேப்களும் ஒரே நேரத்தில் திறந்து விடும் .
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள் என்னையும் சேர்த்து. |
டுடே லொள்ளு
தில்லு இருந்தா எதிர்ல நில்லுங்க பார்ப்போம். ங்கொய்யால அவ்ளோ தான் நீங்க
Comments