பதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக்காக

அனைத்து பதிவர்களும் ஆசைபடும் ஒரு விஷயம் நம் பதிவுகள் பிரபலமடைய வேண்டும் அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும் என்பதே. பிரபலமடைவது என்பது மிக சுலபமான காரியமே ஆனால் இதற்காக நீங்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். பொதுவாக சில பதிவர்கள் அவர்களுக்கே தெரியாமல் சில அடிப்படை தவறுகளை செய்து கொண்டு உள்ளனர். அந்த தவறுகளை நீங்கள் தவிர்த்தல் உங்கள் பிளாக் பிரபலமடைவதை யாராலும் தடுக்க முடியாது.
Writting Same Subject
பதிவர்கள் சிலர் ஒரே வகைகளில் பதிவுகள் எழுது கின்றனர். உதாரணமாக கதை, கவிதை இது போல முடிந்தவரை ஒரே வகையான தலைப்புகளில் பதிவுகள் எழுதும் போது நம் வாசகர்களில் 50% பேர் அதனை படிக்க விரும்புவதில்லை. அதாவது நீங்கள் ஒரு கதை பதிவு போட்டால் கதையை சுருக்கி அன்றே அந்த கதையின் முடிவை தெரிவிக்கும் படி செய்யுங்கள். அதிக பட்சம் 2 வது பதிவில் முடித்து விடுங்கள். தினம் தினம் புது புது வாசகர்கள் நம் தளத்திற்கு வருவதால் இடையில் பார்த்தால் ஒன்றும் புரியாது அவர்கள் பழைய பதிவுகளை பார்க்கும் அளவிற்கு பொறுமை கொள்ள மாட்டார்கள்.
Not Using Pictures:
நீங்கள் பதிவு எழுதும் போது இடையிடையில் பதிவிற்கு சம்பந்தமான படங்களையோ அல்லது ஸ்க்ரீன் ஷாட் போடுவது மிகவும் நல்லது. அப்படி போடுவதால் நம் பதிவுகள் பார்த்தவுடன் வாசகர்களுக்கு புரியும் படிப்பதற்கும் சுலபமாக இருக்கும். இது மட்டுமில்லாமல் படங்களை சேர்ப்பதனால் நம் முழு பதிவே அழகாக காணப்படும். இதனால் புதியாதாக வருபவர்களுக்கு நம் தளத்தின் மீது நல்ல எண்ணம் வந்து திரும்பவும் அவர்களை வர வைக்கும். படங்களை சேர்ப்பதும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு அதிகபட்சம் 4 படங்களை சேர்த்தல் போதுமானது.

Sub Headings
நாம் பதிவுகள் எழுதும் பொழுது பதிவுகளின் இடையே துணை தலைப்புகள் கொடுத்து எழுதினால் மிகவும் நன்று. இதனால் நம் பதிவுகள் மொத்தமாக இல்லாமல் தனி தனியாக பிரித்து காணப்படும். பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அழகாவும் சுலபமாகவும் இருக்கும்.

Making Paragraphs to Large
பதிவுகள் எழுதும் நாம் சொல்ல வரும் விசயத்தை மக்களுக்கு எளிதாக விளங்க வைக்க வேண்டுமெனில் ஒரே பதியாக இல்லாமல் சிறு சிறு பத்தியாக பிரித்து எழுதுவது சால சிறந்தது.

Adding More Widgets
உங்களுடைய பிளாக் அழகாக வைத்திருப்பது உங்கள் கடமை உண்மை தான் அதற்காக நீங்கள் இருக்கும் அனைத்து விட்ஜெட்டுக்களையும் பேனர்களையும் அனிமேஷன் படங்களையும் உங்கள் பிளாக்கில் போட்டு கொள்வதால் மட்டும் உங்கள் பிளாக் அழகாகாது. மாறாக உங்கள் பிளாக் திறக்கும் நேரம் தான் அதிகமாகும் இதனால் உங்களின் விலைமதிப்பில்லாத வாசகர்களை நீங்கள் இழக்க நேரிடும். ஆதலால் தேவையில்லாத விட்ஜெட்டுக்களை உங்கள் பிளாக்கில் இருந்து நீக்கி விடுங்கள். 

You Should Add This Widget
நீங்கள் உங்கள் பிளாக்கில் கண்டிப்பாக இந்த விட்ஜெட்டுக்களை சேர்த்திருக்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் உங்களின் பதிவுகள் பிரபலமடையும். 
Punctuality:
பதிவர்களே உங்களின் வாசகர்களை இழக்காதீர்கள் அதற்கு உங்கள் பதிவுகளை தினமும் வெளியிடுங்கள். குறைந்த பட்சம் வாரம் மூன்று பதிவுகளையாவது வெளியிடுங்கள். நீங்கள் பதிவிடும் நாட்களில் தவறாமல் பதிவை போட்டு விடுங்கள். இது உங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்காமல் இருக்கும். 
Choose Right Template
நீங்கள் உங்கள் பிளாக்கின் டெம்ப்ளேட் தேர்வு செய்யும் போது பின்புறம் வெள்ளை நிறத்தில் உள்ள டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டும். கருப்பு நிற டெம்ப்ளேட் மற்றும் பின்புறத்தில் படங்கள் இருக்கும் டெம்ப்ளேட் தேர்வு செய்ய வேண்டாம் .

டுடே லொள்ளு
இந்த வால் ஆட்டுற பழக்கதுனால நிம்மதியா தூங்க கூட முடியல வேற வழி இருந்த சொல்லுங்கப்பா 
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.

Comments