நாம் இணையத்தில் உள்ள பக்கங்களில் எந்த பக்கத்தை வேண்டுமானாலும் நம் விருப்பம் போல மாற்றி கொள்ளலாம். உதாரணமாக கீழே உள்ள படங்களை பாருங்கள் இதில் எதுவும் உண்மை இல்லை. ஆனால் இது போன்று எப்படி மாற்றி Screen Shot எடுப்பது பார்க்கலாம். முக்கியமானது இந்த முறையில் நீங்கள் எடிட் செய்த பக்கத்தை மறுபடியும் Refresh செய்தால் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும். Screenshot மட்டும் எடுத்து கொள்ளலாம். எல்லாமே ஒரு ஜாலி தாங்க நீங்களும் செய்து பாருங்க சூப்பராக இருக்கும்.
இந்த முறையை வைத்து தான் நிறைய ஆங்கில தளங்கள் நாங்கள் ஒரே நாளில் அட்சென்ஸ் மூலம் அவ்வளவு சம்பாதித்தேன், இவ்வளவு சம்பாதித்தேன் உங்களுக்கும் வேண்டுமா 10$ கொடுங்கள் உங்களுக்கு அந்த டிப்ஸ் கூறுகிறேன் என்று நம்மை ஏமாற்றுகின்றன. ஆகவே அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் அவைகள் உண்மை அல்ல.
- இதற்கு முதலில் நீங்கள் மாற்ற நினைக்கும் இணைய பக்கத்தை முதலில் திறந்து கொள்ளுங்கள்.
- அந்த பக்கம் திறந்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த பக்கத்தின் அட்ரஸ் பாரில் கொடுத்து எண்டர் கொடுக்கவும்.
javascript:document.body.contentEditable%20=%20'true';%20document.designMode='on';%20void%200
- மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கீபோர்டில் என்ட்டர் கொடுக்கவும்.
- இதை கொடுத்தவுடன் அவ்வளவு தான் அந்த பக்கம் எடிட் மோடிற்கு சென்று விட்டது இனி நீங்கள் அந்த பக்கத்தில் என்ன வேண்டுமென்றாலும் விளையாடலாம்.
- இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் நீங்கள் எடிட் செய்யும் பகுதியில் எழுத்துக்கள் எந்த நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் நீங்கள் சேர்க்கும் எழுத்துக்களும் வரும். இதனால் தான் மற்றவர்களால் கண்டறிய முடியவில்லை.
- நீங்கள் என்ன மாற்றினாலும் அதை Screenshot எடுத்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது நிரந்தரமல்ல மீண்டும் அந்த பக்கத்தை Refresh செய்தால் அனைத்தும் போய்விடும்.
- இந்த முறையில் படங்களை கூட Copy& Paste செய்து மாற்றி கொள்ளலாம்.
டுடே லொள்ளு
ஓ சோனா.. ஓ சோனா.. ஓ சோனா... ஐ லவ் யு லவ் யு டா
Comments