நாம் இணையத்தில் இருந்து நமக்கு தேவையான தகவலை PDF வடிவில் தேடி டவுன்லோட் செய்ய ஒரு தேடியந்திரம் உள்ளது. இந்த தளத்தில் மின் புத்தகங்களையும் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதிக்கு நாம் கூகுளை பயன்படுத்தினாலும் கூகுளில் டவுன்லோட் லிங்க் காட்டபடாது (கூகுளில் PDF பைல்களை எப்படி தனித்து தேடுவது). ஆகவே இந்த தளம் நமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. டவுன்லோட் செய்யப்படும் PDF பைல்களின் Preview நாம் அந்த தளத்திலேயே பார்க்கும் வசதியும் உள்ளது. ஆகையால் நமக்கு தேவையான தகவல் இந்த பைலில் இருந்தால் மட்டுமே அதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- இந்த தளத்தில் சென்று வரும் விண்டோவில் நீங்கள் தேட விரும்பும் PDF பைலின் வார்த்தையை கொடுத்து Search Books என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது முடிவுகள் வரும் இதில் உங்களுக்கு தேவையான முடிவில் இருக்கும் டவுன்லோட் பட்டனை அழுத்தி அந்த பைலை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- இதே முறையில் உங்களுக்கு தேவையான பைல்களை சுலபமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு செல்ல லிங்க் - http://pdf-search-engine.net
டுடே லொள்ளு
எங்களை உன் அடியாட்கள்(இலங்கை ராணுவம்) கொல்றது போதாதுன்னு நீயும் கெளம்பிட்டியா
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவருக்கும் பயன்படும். |
Comments