நாம் கணினியில் என்னதான் ஆண்டி வைரஸ் போட்டிருந்தாலும் புதிய வைரஸ்கள் அவைகளை ஏமாற்றி நம் கணினியில் புகுந்து விடுகிறது. இது உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சினையாகும். இவைகளை கருத்தில் கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது Safety Scanner என்ற மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.
பயன்கள்:
- இது 100% இலவச மென்பொருளாகும். மென்பொருளின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இதனை இலவசமாக இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
- இது ஒரு போர்டபிள் மென்பொருளாகும்.
- ஏற்கனவே நம் கணினியில் ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவி இருந்தாலும் இந்த மென்பொருள் வேலை செய்யும். ஆகவே பழைய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை நீக்க வேண்டியதில்லை.
- இது வைரஸ் மட்டுமல்லாது கணினியில் உள்ள மால்வேர்,ஸ்பைவேர் ஆகியவைகளையும் கண்டறிந்து நீக்குகிறது.
- இந்த மென்பொருளை விண்டோஸ் XP முதல் அதற்கடுத்து வந்த விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய கணினிகளில் பயன்படுத்தலாம்.
டவுன்லோட் முறை:
- இந்த மென்பொருளை சுலபமாக டவுன்லோட் செய்யலாம். இதற்க்கு முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்துங்கள்.
- இந்த மென்பொருள் 67mb அளவுடையது.
- முதலில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- படத்தில் காட்டியுள்ள படி download Now என்ற அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போன்று இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
- இதில் உங்கள் கணினியின் பதிப்பை க்ளிக் செய்தால் போதும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகும்.
- டவுன்லோட் முடிந்தவுடன் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டிஸ்கி 1: இந்த மென்பொருள் 10 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும். பின்னர் செயல் இழந்து விடும். இதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய இந்த மென்பொருளை திரும்பவும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
டிஸ்கி 2: இந்த மென்பொருள் செயல்பாடு அனைவருக்கும் பிடித்துள்ளதா என கண்டறியவே இது போன்று வைத்துள்ளனர். இரண்டாவது முறை இந்த மென்பொருளை எவ்வளவு பேர் டவுன்லோட் செய்கிறார்கள் என்பதை பொறுத்தே இந்த மென்பொருளின் தரம் நிர்ணயிக்கப்பட இருக்கிறது. டவுன்லோட் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மேலும் பல மாற்றங்கள் செய்து வெளியிடலாம்.
டுடே லொள்ளு
உண்மையிலே சொல்றேங்க நம்புங்க ப்ளீஸ் இது நான் போட்ட முட்டை தாங்க. அணைத்து கிறிஸ்துவ தோழர்களுக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.
உண்மையிலே சொல்றேங்க நம்புங்க ப்ளீஸ் இது நான் போட்ட முட்டை தாங்க. அணைத்து கிறிஸ்துவ தோழர்களுக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.
நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள். |
Comments