மீடியோ ப்ளேயர்கள் மாற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நம் கணினியில் ஆடியோவும், வீடியோவையும் பார்த்து கேட்டு ரசிக்க உதவும் மென்பொருட்கள் மீடியா ப்ளேயர்கள் என அழைக்க படுகிறது. இணையத்தில் ஏராளமான மீடியா ப்ளேயர்கள் இலவசமாக கிடைக்கிறது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் கூடிய மீடியா ப்ளேயர்களும் வந்து கொண்டு உள்ளன. இதில் உலகில் எல்லோராலும் உபயோகிக்க படும் மிக பிரபலமான சிறந்த ஐந்து மீடியா பிளேயர்களின் புதிய பதிப்புகளை கீழே கொடுத்துள்ளேன். இதில் சென்று தேவையானவர்கள் புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.
1) Windows Media Player
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgucjpKsgEcqKJ_tJ0jsoLcVWnZb86JQwOR8kgotDM1OOT5wZ0oApdWhW04KBBtbR9yzAfpx_F83DYZ9k8ft_vlcqqyumHqTTCGJ51G0FFsR9lEP24fCpvZhx-Au7IqEO9nOcKGJB4zVpU/s320/windows+media+player.jpg)
- பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒரு இலவச சேவையாகும்.
- கணினி வாங்கும் போதே இந்த மென்பொருளும் டீபால்ட்டாக நம் கணினியில் இருக்கும்.
- இதனுடைய புதிய பதிப்பு Windows Media Player12 ஆகும். இதை விண்டோஸ் 7 உபயோகிப்பவர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
- புதிய பதிப்பில் 3GP,AAC, AVCHD போன்ற வீடியோக்களையும் காணும் வசதி உள்ளது.
- புதிய பதிப்பில் Remote Media Streaming என்ற புதிய வசதியை புகுத்தியுள்ளனர்.
- விண்டோஸ் 12 விண்டோஸ்7 இயங்கு தளம் வாங்கும் போதே இந்த மென்பொருள் சேர்ந்தே இருக்கும்.
Windows media player 11(Vista,XP) - Download
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-kik8wa8MF8acCqBsT7dd5MmfTW09y3LfzvSUg2cFr0MCXgUSeAuVZMneZzAr6wWe5lTYRjGexP3sX4atWPdS5PWjgcpIDio_6d_5UqvFO87ho2yR2IcJDGIo0Is8z-9Ud_XDgSIMMMI/s320/vlc+player.png)
- VLC மீடியா பிளேயர் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு பிரபலமான மென்பொருளாகும்.
- பெரும்பாலான பார்மட்டுகளில் வீடியோக்களையும் ஆடியோவையும் கண்டு ரசிக்கலாம்.
- இப்பொழுது VLC பிளேயர் புதிய பதிப்பு 1.1.9 வெளிவந்து அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
- இந்த புதிய பதிப்பில் நீங்கள் இணையத்தில் இருந்து வீடியோவையை டவுன்லோட் செய்யாமலே அதன் ஸ்ட்ரீமிங் URL கொடுத்தால் நம் வீடியோவை பார்த்து கொள்ளலாம்.
- இந்த புதிய பதிப்பு கணினியின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சில பாதிப்புக்கு உண்டான வீடியோக்கள் தடை செய்யப்படும்.
VLC Media Player 1.1.9 (Win Me/2000/NT/XP/Vista/7) - Download
3. KMPlayer
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhACh0R4B5VkltZwNCIWprCualx2anQqVSTXf6ZUXdV1A_9F0Bg8UeveWuzYmGgPJLLONhoNhWuFXYLnO57iy1zJIuDSLyrlZ4dzunKvEUcdyhtR9JL8EvrmGHWOIU889pGFn2O0uwTfkA/s320/KMP+Player.jpg)
- பெரும்பாலானவர்களால் விரும்பி பயன்படுதப்பதும் மீடியா ப்ளேயர் மென்பொருட்களில் இதுவும் ஒன்று.
- கணினியில் குறைந்த இடமே பிடித்து கொள்வதால் நம் கணினியின் வேகம் குறைவதில்லை.
- பெரும்பாலான பார்மட் பைல்களை இயக்க முடியும்.
KMPlayer3.0.0.1439 (Win 2000/XP/2003/Vista/7) - Download
4) Real Player
- இந்த மென்பொருள் பைல்களை இயக்குவது மட்டுமின்றி பல கூடுதல் வசதிகளும் நிறைந்துள்ளது.
- இணையத்தில் நேரடியாக பைல்களை டவுன்லோட் செய்யும் வசதி இதில் உள்ளது.
- வீடியோக்கள் பார்மட்டுக்களை மாற்றும் வீடியோ கன்வெர்டர் வசதியும் இதில் உள்ளது.
- CD Burner மென்பொருளாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
- இதில் பார்க்கும் வீடியோக்களை மொபைல்களுக்கு காப்பி செய்து கொள்ளும் வசதி உள்ளது.
RealPlayer SP14 (XP/Vista/7) - Download
5) Winamp
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvERJs6ym9bHHH7TnbznGwQgFjjdAj3rdipma7PHQmbNWh_6y4pY7e-zT9gW5YjGxD30eTpKm5sJLeBZKUTLBo78Madimqw7OkXct7eRPE7OWrUlUY3Cs9RDkifwjS8g9HuXW0qRLndL4/s200/winamp.jpg)
- இந்த மென்பொருள் வெளியிடப்படும் போது ஒரு பேசிக் மாடலாகவே வெளியிட்டனர்.
- ஆனால் தற்போது கணினி உபயோகிப்பவர்களால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.
- இதில் உள்ள ஒரு குறைபாடு Mov பைல்களை இயக்க முடியாது மேலே உள்ள மென்பொருட்களில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் இதிலும் உள்ளது.
Winamp 5.61 Full (Win 98/98SE/ME/2000/NT/XP/Vista/7) - Download
டுடே லொள்ளு
எல்லோரும் பாட்டு பாடுங்கள் என்னோடு சேர்ந்து ஆடுங்கள்........
பாட்டு எப்படி இருந்ததுன்னு கீழே கமெண்ட்ல சொல்லிட்டு போங்க தல...
Comments