கணினியில் டீபால்ட் பிரவுசரை எவ்வாறு மாற்றுவது - Chrome,Firefox,IE


இணையம் என்ற கடலில் நீந்த நாம் இந்த பிரவுசர்களின் உதவியை நாடுகிறோம். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகித்து கொண்டிருப்பது குரோம்,பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்ற இனைய பிரவுசர்களாகும். அனைத்து பிரவுசர்களிலும் ஒரு வசதி உள்ளது Make Default Browser என்பது. இந்த வசதியில் நமக்கு பிடித்த உலவியை தேர்வு செய்து விட்டால் நாம் இணையத்தில் இருந்து சேமிக்க படும் லிங்குகள் அனைத்தும் அந்த டீபால்ட் பிரவுசரில் ஓபன் ஆகும் படி தான் சேமிக்கப்படும்.
இந்த வசதி நாம் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் போதே கேட்கும் அதை கவனிக்காமல் நம்மில் பெரும்பாலானவர்கள் எதையும் படித்து பார்க்காமல் Next கொடுத்துக்கொண்டே வந்து விடுவோம். கடைசியில் நாம் இன்ஸ்டால் செய்த புதிய பிரவுசர் நம்முடைய கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
இது போன்ற நிலையில் டீபால்ட் பிரவுசரை எப்படி மாற்றுவது என கீழே காணலாம்.

Change Firefox my default browser
  • பயர் பாக்ஸ் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்ற முதலில் பயர்பாக்ஸ் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Options என்பதை க்ளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Advanced என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் Check now என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
  • அடுத்து வரும் பாப் அப் விண்டோவில் Yes என்பதை அழுத்தினால் உங்களுடைய பயர்பாக்ஸ் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

Change Google Chrome as my default web browser
  • குரோம் பிரவுசரை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்ற முதலில் குரோம் உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Settings - Options க்ளிக் செய்து வரும் விண்டோவில் கீழே உள்ள Make Google Chrome my default browser என்பதை கிளிக்செய்தால் போதும் குரோம் உலவி உங்கள் கணினியின் டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.

Change Internet Explorer as my default web browser
  • குரோம் IE உலவியை தங்களின் டீபால்ட் பிரவுசராக மாற்ற முதலில் IE உலவியை ஓபன் செய்து கொண்டு அதில் Tools- Internet Options- Programs என்பதை க்ளிக் செய்யுங்கள்.
  • அடுத்து வரும் விண்டோவில் உள்ள Make Default என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
  • அந்த பட்டனை அழுத்தினால் IE உலவி உங்களுடைய டீபால்ட் பிரவுசராக மாறிவிடும்.
டுடே லொள்ளு

டாட்டா பை பை..... போயிட்டு திரும்பவும் மறக்காம வந்துடுங்க  

Comments