பிளாக் வைத்திருக்கும் நாம் அனைவரும் விரும்புவது நம்முடைய பிளாக் கூகுள் தேடலில் வரவேண்டும் என்பது தான். கூகுள் தேடலில் நம் பிளாக் வந்தால் நம் பிளாக்கின் ட்ராபிக் கணிசமாக அதிகரிக்கும். குறிப்பாக கூகுள் தேடலில் ஒருவர் நம் பிளாக்கிற்கு வந்தால் அது திரட்டிகளில் இருந்து 5 பேர் நம் தளத்திற்கு வருவதற்கு சமம். இதனால் தான் ஒரு சில தளங்கள் குறைந்த ட்ராபிக் பெற்றிருந்தாலும் அலெக்சா ரேங்கில் முன்னேறி காணப்படும். ஆகவே நாம் அனைவரும் நம் பிளாக்கை கூகுள் தேடலில் கொண்டு வருவதற்கு பல்வேறு நுணுக்கங்களை கையாள்கிறோம். அதில் ஒன்று இந்த DMOZ டைரக்டரியில் நம்முடைய பிளாக்கை இணைப்பது. அது மட்டுமல்லாது பிளாக்கின் கூகுள் பேஜ் ரேங்க் உயர்த்தலாம்.
- தங்களுடைய பிளாக் ஆங்கிலத்தில் இருந்தால் நேரடியாக அந்த தளத்தில் குறிப்பிட்ட வகைகளை க்ளிக் செய்து அதில் சேர்த்து விடலாம். வலைப்பூ தமிழில் இருந்தால் World என்பதை க்ளிக் செய்யவும்.
- World க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் நிறைய உலக மொழிகளின் லிஸ்ட் இருக்கும் அதில் Tamil என்பதை தேர்வு செய்யவும்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் உங்கள் பிளாக்கின் பெரும்பாலான பதிவுகள் இருக்கும் வைகையை தேர்வு செய்து கொள்ளவும்.
- நீங்கள் பிளாக்கை சேர்க்க போகும் வகையை தேர்வு செய்தவுடன் இன்னொரு பக்கம் ஓபன் ஆகும் அந்த பக்கத்தில் உள்ள Suggest URL என்பதை க்ளிக் செய்யவும்.
- படத்தில் காட்டியுள்ள லிங்க்கை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு வேறொரு பக்கம் ஓபன் ஆகும் அதில் உள்ள அனைத்து விவரங்களையும் கொடுத்து கீழே உள்ள Submit என்பதை கொடுத்தால் போதும் உங்களின் கோரிக்கை தல நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டு விடும்.
- தங்களுக்கு இது போன்ற ஒரு செய்தி வரும்.
- இனி தள நிர்வாகிகள் உங்களின் கோரிக்கையை ஏற்று உங்கள் தளத்தை அவர்களுடைய லிஸ்ட்டில் சேர்ப்பார்கள் அதற்க்கு சில நாட்கள் பிடிக்கும் காத்திருக்கவும்.
- சில நாட்கள் ஆகியும் சேரவில்லை என்று நீங்கள் மறுபடியும் கோரிக்கையை அனுப்ப வேண்டாம். அனுப்பினால் மேலும் தாமதமாகும்.
இந்த தளத்திற்கு செல்ல - www.dmoz.org
தொடர்பு இடுகைகள்:
டுடே வேண்டுகோள்
தினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை ஊனமுற்றோருக்கு செய்வோம்.
Comments