நாம் இணையத்தை பயன்படுத்த நமக்கு உதவி புரிவது இந்த பிரவுசர்களாகும். இணையத்தில் நிறைய பிரவுசர்கள் இருந்தாலும் இதில் பெரும்பாலனாவர்களால் உபயோகபடுத்த படுவது IE, chrome, மற்றும் பயர்பாக்ஸ் உலாவியாகும். இதில் பயர்பாக்ஸ் பிரவுசர் இரண்டாவது மிகப்பெரிய பிரவுசராகும். முதலிடத்தில் இருப்பது IE ஆகும். விண்டோஸ் கணினி வாங்கும் போதே இந்த IE பிரவுசரை நிறுவி கொடுப்பதால் தான் இந்த உலவி முதல் இடத்தில் உள்ளது. இல்லை என்றால் பயர்பாக்ஸ் தான் முதலிடத்தில் இருக்கும்.
சமீபத்தில் தான் மாதம் தான் பயர்பாக்ஸ் 4.1 வெளியிடப்பட்டு இணைய டவுன்லோடில் சாதனை நிகழ்த்தியது. இதுவரை இந்த பயர்பாக்ஸ் உலவியை கோடிகணக்கான பேர் டவுன்லோட் செய்து உள்ளனர். வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே இவ்வளவு பேர் டவுன்லோட் செய்த இந்த மென்பொருள் தற்போது மேலும் பல வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பான பயர்பாக்ஸ் 5 வெளியிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட வசதிகள்:
- CSS அனிமேசன் படங்களுக்கு சப்போர்ட் செய்கிறது.
- JavaSript மற்றும் நெட்வொர்கிங் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- HTML5, MathML, XHR,SMIL போன்ற இணைய பைல்களுக்கு நன்றாக சப்போர்ட் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- லினக்ஸ் உபயோகிப்பாளர்களுக்கு புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும்.
- மேலும் பல வசதிகள் நிறைந்து காணப்படுகின்றன.
கீழே உள்ள இணைப்புகளில் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
விண்டோஸ் கணினிகளுக்கு(English) - Download
லினக்ஸ் கணினிகளுக்கு(English) - Download
Mac கணினிகளுக்கு (English)- Download
டுடே லொள்ளு
தெரியாம இந்த பதிவுலகம் பக்கம் வந்துட்டேன், ஆளாளுக்கு டிப்ஸ் தரேன்னு சொல்லி என்ன இப்படிபண்ணிட்டாங்களே....
Comments