சுஜாதா தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பலதுறைகளில் சாதனை படைத்த எழுத்தாளார் சுஜாதா உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். அவர் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இன்றும் உலக தமிழர்கள் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம்பெற்றுள்ளது.
Tamil Novels Written by Writer Sujatha | |||
No. | Book Title | Author | Download |
1 | Amma mandapam | Sujatha | |
2 | Arangetram | Sujatha | |
3 | Arisi | Sujatha | |
4 | Curfew | Sujatha | |
5 | Eldorado | Sujatha | |
6 | Eppadiyum vazhalam | Sujatha | |
7 | Film utsav | Sujatha | |
8 | Ilaneer | Sujatha | |
9 | Jannal | Sujatha | |
10 | Kaalgal | Sujatha | |
11 | Kaaranam | Sujatha | |
12 | Nagaram | Sujatha | |
13 | En Iniya Endhira | Sujatha | |
14 | Merina | Sujatha | |
15 | Sujatha Sirukadhaigal | Sujatha | |
16 | Katradhum Petradhum (Vikatan) | Sujatha | |
17 | Kadavul Irukkirara | Sujatha |
சுஜாதா பல நூற்றுகணக்கான நாவல்களும் சிறுகதைகளும் நாடங்களும் இயற்றி இருக்கிறார். அதில் சில புத்தகங்களை மட்டுமே என்னால் இணையத்தில் தேடி எடுக்க முடிந்தது அதை தான் உங்களோடு பகிர்து கொள்கிறேன். உங்களுக்கு வேறு ஏதேனும் புத்தகங்களின் லிங்க் தெரிந்தால் கீழே கமென்ட் பகுதியில் தெரிவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி : தமிழ் விக்கிபீடியா
டுடே லொள்ளு
ங்கொய்யால இது அமெரிக்கா இல்ல வந்து மோதிட்டு போறதுக்கு இந்தியாடா, நீங்க கில்லாடின்னா நாங்க கில்லாடிக்கும் கில்லாடி.
Comments