கணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்து அழிக்க

கணினிக்கு மிகவும் அவசியமானது சாப்ட்வேர்கள் ஆகும். கணினியில் நம்முடைய வேலைகளை குறைக்கவும் சில அதிக்கப்படியான வசதிகளுக்கும் மென்பொருட்களை உபயோகிக்கிறோம். மென்பொருட்கள் இல்லாமல் கணினி இருப்பது வீண் தான். மென்பொருட்களை பிரபல கணிப்பொறி நிறுவனங்கள் தயாரித்து நமக்கு விலைக்கு தருகிறது. இந்த மென்பொருட்களை உபயோகித்தால் நம்முடைய எந்த பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக இருக்கும் ஆனால் நாம் பெரும்பாலும் மென்பொருட்களை காசு கொடுத்து வாங்காமல் கிராக் பதிப்பையோ அல்லது இணையத்தில் கொட்டி கிடக்கும் இலவச மென்பொருட்களை தரவிறக்கி உபயோகிக்கிறோம்.
இப்படி இலவச மென்பொருட்களை உபயோகிக்கும் போது சில மால்சியஸ் மென்பொருட்களால் நம்முடைய கணினி பாதிக்கப்படும். ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களும் இந்த மென்பொருட்களை கண்டறிய முடியாததால் கணினி மேலும் மேலும் பாதிக்கப்பட்டு நாளடைவில் முற்றிலுமாக செயலிழக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க
மைக்ரோசாப்ட் நிறுவனம் மால்சியஸ் மென்பொருட்களை கண்டறிந்து அளிக்க ஒரு மென்பொருளை வெளியிட்டு உள்ளது. 

  • இந்த மென்பொருளை Malcious Software Removal டவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்யும் போதே உங்கள் கணினியை ஸ்கேன் செய்ய ஆரம்பித்து விடும். 
  • உங்கள் கணினியில் உள்ள அனைத்து மென்பொருட்களும், எக்ஸ்கியுட்டபில் பைல்கள் அனைத்தும் ஸ்கேன் செய்யும். 
  • இதில் ஏதேனும் தீங்கு இழைக்க கூடிய மென்பொருட்கள் கணினியில் இருந்தால் அதை கண்டறிந்து அழித்து விடும். 
  • அப்படி உங்கள் கணினியில் எந்த மால்சியஸ் மென்பொருளும் இல்லை அனைத்து மென்பொருட்களும் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு எந்த மென்பொருளும் பாதிக்க படவில்லை என்ற செய்தி வரும்.
டுடே லொள்ளு 

ஸ்ஸ்ஸ்ஸப்பா... இன்னா வெயிலு அடிக்குதுப்பா.... எவன்ய்யா இந்த பிளாக் ஓணர் அடுத்த முறை கூப்பிடும் போது ஏசி இல்லன்ன வரமாட்டேன்.... 

Comments