பிளாக்கரின் +1 பட்டனில் யார் ஓட்டு போட்டார்கள் என சுலபமாக அறிய

சிறந்த பதிவுகளை தரம்பிரிக்க கூகுள் சமீபத்தில் கொண்டுவந்த வசதி கூகுள் +1 ஓட்டு பட்டன் வசதி. இந்த பட்டனை வலைப்பூவில் நிறுவி அதில் அதிக ஓட்டுக்களை பெரும் பதிவுகள் கூகுளில் முதன்மை இடத்திற்கு வரும்படி செட்டிங்க்ஸ் செய்து இருந்தனர். இதனால் அனைவரும் அந்த பட்டனை நம் பிளாக்கில் பொருத்தி இருந்தோம். இப்பொழுது அந்த பட்டனில் ஒரு புதிய வசதியை அறிமுக படுத்தியுள்ளனர். அந்த பட்டனில் மீது உங்கள் கர்சரை வைத்தால் ஓட்டு போட்டவர்களின் விவரமும் அதில் தெரியும். இனி நீங்கள் உங்கள் பதிவுக்கு யார்யார் ஓட்டு போட்டார்கள் என்ற விவரத்தையும் அறிந்து கொள்ளலாம். 

முன்பு உங்கள் கர்சரை வைத்தால் இது போல வரும் 


இப்பொழுது உங்கள் கர்சரை பட்டன் மீது வைத்தால் 


  • மாற்றம் தெரிகிறதா நீங்களும் இந்த வசதியை உடனே பெற வேண்டுமா இது வெகு சுலபம். இந்த லிங்கில் Google+1 Preview செல்லுங்கள். 
  • உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்கள் +1 பட்டனுக்கான ஜிமெயில் ஐடியை கொடுத்து அருகில் உள்ள Sign me up என்ற பட்டனை அழுத்தவும். 
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். கூகுள்+1 பட்டனின் புதிய அப்டேட்கள் உங்கள் மெயிலுக்கு வர வேண்டாம் என நினைத்தால் No email என்பதை தேர்வு செய்து கீழே உள்ள join this group என்ற பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் அந்த பட்டியலில் சேர்ந்து விடுவீர்கள். 
  • புதிய வசதிகளும் உங்களுடையை +1 பட்டனில் சேர்ந்து விடும். இப்பொழுது உங்கள் பிளாகிற்கு சென்று +1 பட்டனின் மீது கர்சரை வைத்து கொள்ளுங்கள். 
டுடே லொள்ளு


காரம் கொஞ்சம் அதிகமா போடு மாப்ள அப்பா தான் சைடிஷ்க்கு நல்லா இருக்கும் 
(விக்கிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்ல)
/*****************/

Comments