
அனைவரும் பேஸ்புக் விரும்ப காரணம் என்ன:
பேஸ்புக்கில் உள்ள வசதிகளுக்கு மேல் கூகுளில் பல வசதிகள் நிறைந்து காணப்பட்டாலும் எல்லாம் வெவ்வேறு தளங்களாக உள்ளது. உதாரணமாக ஒரு போட்டோவை நண்பர்களுடன் பகிர பிக்காசா, வீடியோவை பகிர யுடியுப் , அரட்டை அடிக்க ஜிமெயில்,ஜிடாக் இப்படி பல பிரிவுகளாக உள்ளது. ஆனால் இந்த எல்லா வசதிகளையும் பேஸ்புக்கில் ஒரே இடத்தில் இருந்து செய்ய முடியும். இது போன்ற சில காரணங்களால் பேஸ்புக் அனைவராலும் விரும்பப்படுகிறது.
கூகுளின் அதிரடி திட்டம்
இவைகளை எல்லாம் பார்த்து கிட்டு கூகுள் சும்மா இருக்குமா என்ன நானும் உனக்கு போட்டியாக சமூக தளத்தை வெளியிட்டு உன் வாசகர்களை குறைக்கிறேன் பார் என்று வேட்டிய மடித்து கட்டி கொண்டு மல்லுக்கு நிற்கிறது. கூகுள் புதியதாக ஒரு சமூக தளத்தை வெளியிட உள்ளது. அதற்க்கு கூகுள் பிளஸ் என்று பெயரிட்டுள்ளது.
இந்த தளத்திலும் வசதிகள் குவிந்து காணப்படுகின்றன என்று கூகுள் மார்தட்டி கொண்டு வசதிகளை பட்டியலிடுகிறது. அதில் உள்ள சில முக்கியமான வசதிகளை கீழே காண்போம்
+Circles
இந்த வசதி மூலம் நம்முடைய நண்பர்களை பல குருப்பாக பிரித்து அவர்களுடன் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த குரூப் வசதி பேஸ்புக்கில் இருந்தாலும் பேஸ்புக்கில் குரூப் உருவாக்குவது கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதில் உங்களுக்கு தேவையான நண்பர்களை ட்ராக் செய்து விட்டாலே போதும் அவர்கள் அந்த குறிப்பிட்ட குரூப்பில் வந்து விடுவார்கள். குரூப் பிரிப்பதனால் மேலும் ஒரு பயன் நாம் இந்த தலத்தில் உல் நுழையும் பொழுது இந்த குறிப்பிட்ட குருப்பில் மட்டும் ஆன்லைன் ஸ்டேடஸ் தெரியும் படி அமைத்து கொள்ளலாம்.HANGOUTS எனப்படும் வீடியோ காலிங் வசதி. இந்த தளத்தில் சுமார் 40 மொழிகளில் செய்திகளை பரிமாறி கொள்ளலாம். இந்த தளத்தில் இருந்து மற்ற மொபைல் நண்பர்களிடம் அரட்டை அடிக்கும் வசதி, போட்டோக்களை சுலபமாக அப்லோட் செய்யும் வசதி இது போன்ற மேலும் பல வசதிகள் உள்ளதாம்.
இந்த தளம் இன்னும் பொது செயல் பாட்டுக்கு வரவில்லை உங்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்று கொண்டால் மட்டுமே அந்த தளத்தை நாம் உபயோகிக்க முடியும். இந்த தளத்தில் Google Plus சென்று உங்கள் கோரிக்கையை அனுப்புங்கள். விரைவில் இந்த தளம் பொதுசேவைக்கு வெளியிடப்படும்.
இந்த தளம் உண்மையிலேயே பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Comments