கூகுள் + சுலபமாக உபயோகிக்க கீபோர்ட் ஷார்ட்கட் கீகள்

பேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்க போட்டியாக கூகுள் ஆரம்பித்துள்ள சமூக இணைய தளம் தான் கூகுள் பிளஸ். தற்போது இணையத்தில் எங்கு பார்த்தாலும் கூகுள் பிளஸ் என்ற குரல் தான் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த சமூக இணைய தளத்தில் வசதிகள் ஏராளம். இன்னும் பல வசதிகளை கூகுள்  புகுத்தப்பட உள்ளது. இந்த வசதிகளை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம் இந்த வரிசையில் இன்று கூகுள்+ சுலபமாக உபயோகிக்க நம்முடைய கீபோர்ட் ஷார்ட்கட் கீகள் என்ன வென்று தெரிந்து கொள்ளலாம்.

KEYBOARD SHORTCUTS
GOOGLE+ EFFECT
@
ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் பகிர  @சசிகுமார்
q
இரண்டு முறை அழுத்தினால் உங்கள் chat Window தேர்வாகும்.
Space
கூகுள்+ விண்டோவில் கீழே போக 
Shift + Space
கூகுள்+ விண்டோவில் மேலே போக 

Enter
ஏதாவது ஒரு Stream படிச்சிக்கிட்டு இருக்கும் பொழுது Enter கொடுத்தால் கமென்ட் பகுதி தேர்வாகும்.
Tab + Enter
நீங்க டைப் பண்ண கமென்ட் முடிவுக்கு வரும்.

J
சமீப அப்டேட் Stream அழைத்து செல்லும். திரும்பவும் அழுத்தினால் அடுத்த Stream க்கு அழைத்து செல்லும்.
K
முன்பு பார்த்த Stream க்கு அழைத்து செல்லும்.


* (Bold)
*வணக்கம்* இப்படி கொடுத்தால் இடையில் உள்ள வார்த்தை வணக்கம் என தெரியும்.
_ (Italic)
_வணக்கம்_ இது போல கொடுத்தால் வணக்கம் என தெரியும் 
-
-வணக்கம்- இது போல கொடுத்தால் வணக்கம் என வரும் 


இனி இந்த கீபோர்ட் சார்ட் கட் கீகளை பயன்படுத்தி கூகுள் பிளசை சுலபமாக பயன்படுத்துவோம்.

Comments