கூகுள் பிளஸ் வசதி இன்னும் கிடைக்க வில்லையா? சுலபமாக பெற

பேஸ்புக் சமூக தளத்திற்கு போட்டியாக கூகுள் அறிமுக படுத்தியுள்ள சமூக இணைய தளம் கூகுள் + ஆகும். இந்த தளத்தை முதலில் பீட்டா நிலையில் அறிமுக படுத்தினார்கள் ஆனால் இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வாசகர்கள் குவிந்தனர். சர்வர்கள் ஸ்தம்பித்தது. இவ்வளவு பெரிய ஆதரவை சற்றும் எதிர்பார்க்காத கூகுள் தற்காலிகமாக புதிய வாடிக்கையாளர்கள் இணைவதை நிறுத்தினர். விரும்புவர்கள் invite அனுப்பினால் கூகுள் பிறகு அவர்களுக்கு வசதியை தர தீர்மானித்து அதன் படி வசதிகளை ஏற்படுத்தினர்.
அதனால் பல வாசகர்களுக்கு இந்த சேவை இன்னும் கிடைக்காமல் உள்ளது. இதனால் எப்பொழுது இந்த வசதி கிடைக்கும் என பல வாசகர்கள் காத்து கொண்டிருகின்றனர். 

ஆனால் ஏற்கனவே கூகுள் பிளஸ் வசதியை பயன்படுத்துபவர்கள் புதியவர்களுக்கு invite அனுப்பி அதன் மூலம் இனைபவர்களுக்கு இந்த வசதி சுலபமாக கிடைக்கிறது. 

இந்த வசதி கிடைக்காதவர்களில் நீங்களும் ஒருவரா? நீங்களும் உடனே அந்த வசதியை அனுபவிக்க வேண்டுமா? உங்களுக்கும் கூகுளின் + அழைப்பு வேண்டுமா கீழே கருத்து(Post Comment) பகுதியில் உங்களுடைய ஜிமெயில் ஐடியை கொடுத்தால் உங்களுக்கு கூகுள் பிளஸ் அழைப்பை அனுப்புகிறேன்.

உங்கள் மெயிலுக்கு அழைப்பு வந்தவுடன் அதில் உள்ள Learn More about Google+ என்ற பட்டனை அழுத்தி கூகுள் + தளத்திற்கு சென்றால் ஒரு சிறிய விண்டோவில் உங்களுக்கான சில தகவல்களை கேட்கும். அதை கொடுத்து கீழே உள்ள Join என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்களும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். 


இனி நீங்கள் கூகுள் + வசதியை பயன்படுத்தலாம். இது போன்று அனுப்பப்படும் அழைப்புகளில் பெரும்பாலான வர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது. இந்த முறையிலும் ஒரு சிலருக்கு இந்த வசதி கிடைப்பதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்படுகிறது.

டுடே லொள்ளு

ஏண்டீ உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு என்ன அந்த பக்கம் போக விடேன் 

Comments