வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் மிக்க நன்றி - புதிய பதிவர்களுக்கு சிறிய ஆலோசனை

பிளாக் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் பல நாட்களாக பதிவுகளை மட்டுமே படித்து வந்தவர்களில் நானும் ஒருவன். என்ன எழுதணும், எப்படி பெயர் வைக்கணும் என்று எந்த திட்டமிடலும் இல்லாமல் ஆரம்பித்தது தான் இந்த வந்தேமாதரம் வலைப்பூ. (நான் எழுதும் பதிவுகளுக்கும் வைத்திருக்கிற பெயருக்கும் இருக்கிற ஒற்றுமையை பார்த்தாலே புரிந்திருக்கும்). பதிவுலக அரசியல் பற்றி தெரியாமல் வெகு நாட்களாக கடையில் ஈ ஓட்டி கொண்டிருந்தேன் பின்பு தான் புரிந்தது நுணுக்கங்கள் அதிலிருந்து தொடர்ந்து எழுதுகிறேன். மேலும் இதன் மூலம் பல ஏற்ற தாழ்வுகள் வந்து சென்றுள்ளது. ஒரு நேரத்தில் எழுதவே வேண்டாம் என நினைத்து கொண்டிருந்த வேளையில் நண்பர்கள் கொடுத்த புத்துணர்ச்சி என்னை மேலும் தொடர்ந்து எழுத வைத்தது அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


இன்று வந்தே மாதரத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த இலக்கை பெரும்பாலான தமிழ் பதிவர்கள் அடைந்து இருந்தாலும் நாம் அடையும் பொழுது தான் அதன் உண்மையான மகிழ்ச்சியை பெறுகிறோம். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் ஆனந்தம் அடைகிறேன்.


வந்தே மாதரத்தை பற்றி மேலும் சில விவரங்கள்:

  • Alexa Rank - 47,730     India - 5,308
  • Total Post - 535
  • Total Comments - 7800
  • Total Pageviews - 12 லட்சத்திற்கு மேல் 
என் பிளாக்கை ஆயிரம் பேர் பின்தொடர்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருந்தாலும் தற்போதைய தமிழ் வலையுலகம் சரிவை நோக்கி சென்று கொண்டுள்ளதை அறிய முடிகிறது. இது   வருத்தம் பட வேண்டிய செய்தியாகும். பல புதிய பதிவர்கள் இந்த பதிவுலக அரசியல் தெரியாமல் யாரும் வருவதில்லை ஓட்டுக்கள் போடுவதில்லை என பதிவுகள் எழுதாமல் நிறுத்தி பிளாக்கை மூடி விடுகின்றனர்.

புதிய பதிவர்களுக்கு சிறு ஆலோசனை:

பதிவர்களே வாருங்கள் தமிழ் பதிவுகலம் உங்களை வரவேற்கிறது. உங்களுடைய விருப்பம் போல நல்ல விஷயங்களை எழுதுங்கள் அதே வேளையில் நீங்கள் நல்ல பதிவுகளை எழுதினால் மட்டும் போதாது அந்த பதிவுகள் பலரை சென்றடைய திரட்டிகளில் இணைத்து விடுங்கள். திரட்டிகளில் இணைத்தும் உங்களுடைய பதிவுகளுக்கு ஓட்டு போடாமல் பிரபலமாகாமல் உள்ளதா.

அதனை சரி செய்ய நீங்களும் மற்றவர்கள் தளத்திற்கு செல்லுங்கள் அவர்களுக்கு கருத்துரை அளியுங்கள், பதிவு பிடித்து இருந்தால் ஓட்டு போடுங்கள் பிறகு அவர்களும் உங்களுடைய தளத்திற்கு வருவார்கள் கமென்ட் போடுவார்கள் ஓட்டும் போடுவார்கள். திரட்டிகளிலும் பிரபலமாகும் உங்களுடைய பிளாக்கும் எளிதில் பிரபலமடையும்.  இதை தவிர்த்து நீங்கள் எவ்வளவு சிறந்த பதிவுகள் எழுதினாலும் பிரபலமாவது மிகக் கடினமே. ஆகவே தமிழ் பதிவுலகின் சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ற படி செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மற்றும் சில புதிய பதிவர்கள் பதிவுகளை காப்பி செய்து அவர்களுடைய பிளாக்கில் போட்டு கொள்கின்றனர். இப்படி நீங்கள் செய்வதால் பல பதிவர்கள் உங்கள் பிளாக்கை பொருட்படுத்தவே மாட்டார்கள் பிறகு நீங்கள் சொந்தமாக பதிவு எழுதினாலும் காப்பி செய்து போட்டு இருக்குறீர்கள் என்ற எண்ணம தான் ஏற்ப்படும். ஆகவே இது போன்ற செயலில் ஈடுபடாமல் நேர்மையான முறையில் பதிவுகள் எழுதினால் வெற்றி நிச்சயம். இனி நீங்கள் இந்த தமிழ் பதிவுலகில் ஒரு கலக்கு கலக்கி ரவுண்டு அடிக்கலாம்.

மீண்டும் ஒரு முறை கூறி கொள்கிறேன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Comments