SMS மூலம் கூகுள்+ ல் செய்திகளை உடனுக்குடன் பகிர

இப்பொழுது இணைய உலகில் சூடான விஷயம் இந்த கூகுள் + தான். கூகுள் துவங்கியுள்ள சமூக இணைய தளமான இந்த கூகுள் + தளத்திற்கு ஆதரவுகள் குவிகிறது. இந்த கூகுள் + தளத்தில் ஏராளமான வசதிகள் உள்ளன இவைகள் அனைத்தும் சொல்ல ஒரு பதிவு பத்தாது. ஆகவே ஒவ்வொரு வசதியாக பார்ப்போம். அந்த வரிசையில் நம்முடைய சாதாரண மொபைல் போனில் இருந்து SMS மூலம் கூகுள் + அப்டேட் செய்வது எப்படி என பார்ப்போம்.
  • இந்த வசதியை உபயோகிக்க உங்கள் மொபைலில் இணைய இணைப்பு தேவையில்லை.
  • சாதாரணமாக ஒரு SMSக்கு எவ்வளவு உங்கள் மொபைலில் பிடிபார்களோ அதே தொகை தான் பிடிப்பார்கள். பணம் வீணாகாது. 
  • முதலில் உங்கள் கூகுள்+ கணக்கில் சென்று Google+ Settings என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள உங்கள் மொபைல் எண்ணை தேர்வு செய்து அருகில் உள்ள Send Verification Code என்ற பட்டனை அழுத்தவும். 
    • உங்கள் மொபைல் எண்ணை சரியாக கொடுத்து Send verification code என்ற பட்டனை அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி(SMS) வரும். 
    • அதில் ஆறு இலக்க எண் வந்திருக்கும் அந்த எண்ணை குறித்து கொண்டு Verification கட்டத்தில் கொடுத்து Confirm என்பதை கொடுத்து உங்கள் எண்ணை பதிவு செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பது போல செய்தி வரும். 
    • இதில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் SMS அனுப்பினால் போதும் அது தானாக உங்கள் கூகுள் + கணக்கில் அப்டேட் ஆகும். 
    SMS மூலம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் செய்திகளை பகிர: 

    குறுஞ்செய்தி மூலம் நாம் தகவல்களை பகிரும் பொழுது அந்த தகவல் அனைவருக்கும் செல்லாமல் ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் எப்படி பகிர்வது என பாப்போம்.

    ஒரு குறிப்பிட்ட circle உள்ள நபர்களுக்கு மட்டும் செய்திகளை பகிர உங்களுடைய செய்திகளுக்கு பின் @circle name கொடுக்கவும். உதவிக்கு கீழே பாருங்கள் 

    Good Morning to all @Friends

    அனைவருக்கும் பகிர - @Public 

    Good Morning to all @Public

    ஒரு தனி நபருக்கு பகிர - @Email address

    Good Morning to all @vandhemadharam@gmail.com

    இது போல கொடுத்து 919222222222 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் உங்களுடைய செய்தியை குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அனுப்பலாம்.

    Comments